
அந்தத் தமிழ்ப்பட ஷூட்டிங் ஸ்பாட்... பரபரப்பாய் இருந்தது.
நடிகர், நடிகை, டைரக்டர், கேமேராமேன்... இவர்களைச் சுற்றி ரசிகர் கூட்டம்... திட்டுத்... திட்டாய்.
அதில் பெரிய திட்டு ஒன்றில்...
“டேய். பாருடா. நம்ம ஸ்டார் நடிகை சுஜி. நேர்ல என்ன அழகு! நிறம்... யப்பா... ரோஜா நிறம்.. இல்ல?”
“போடா... ரோஜாவை விட இவங்க நல்ல நிறம்... நடிகை தமன்னா நிறம்னு சொல்லலாம்.”
“அட, நான் ரோஜாப்பூவைச் சொன்னேன்...”
“ஐயோ விடு. கடிக்காத.“ ரசிகர்களின் கமெண்டுகளுக்கு இடையில், “என்னப்பா... அசிஸ்டன்ட், எங்கே போனான் அந்த அசோசியேட்? சமயம் கிடைச்சா முங்கிடுவான்” மலையாளப் பட டைரக்டரின் தமிழ் வசனம் ஒலிக்க,
“இதோ... இதோ வந்திட்டார்... சார்.”
“சார், தேடினீங்களா?" கையில் பேட், கழுத்தில் விசில் சகிதம் அசோசியேட் ஆஜர்.