
கலாக்காயில் வைட்டமின் சி, பி, இரும்புச்சத்து, ஆன்டிஆக்சிடன்ட்களான பிளேவநாய்டுகள், ஆல்கலாய்டுகள், பொட்டாசியம், பாஸ்பரஸ் உள்ளிட்டவை நிறைந்துள்ளன.
உலர வைத்த கலாக்காய் பொடியை தண்ணீரில் கலந்து குடித்து வந்தால் அஜீரணக் கோளாறு, வாயு மற்றும் வயிறு வீக்கம் போன்ற பிரச்சினைகள் தீரும்.
கலாக்காயில் உள்ள பெக்டின் எனும் ஸ்டார்ச் செரிமானத்தை மேம்படுத்துவதற்கு உதவுகிறது.
கலாக்காயை ஊறுகாய் ஆக்கி உணவுடன் சேர்த்துக்கொள்ள, பசியின்மை, சுவையின்மை, பித்தம், பித்தத்தினால் வரும் குமட்டல் போன்றவை குணமாகும். இது தாகத்தை தணிக்கிறது.
கண்ணில் ஏற்படும் வெண்படலம், கரும்படலம், ரத்தப் படலம், சதை படலம் போன்ற நோய்கள் குணமாவதற்கு கலாக்காய் அருமருந்து.
கலாக்காய், அஸ்காரிஸ், ஈறுகளில் இரத்தம் வடிதல், உட்புற உறுப்புகளில் இரத்தம் வடிதல் போன்ற பிரச்சினைகளை சரி செய்கிறது.
கலாக்காய் முடியின் வேர்க்கால்களை வலிமையாக்க உதவுகிறது. அதனால் கூந்தல் வலிமையுடன், ஆரோக்கியமாக, பளபளப்பாக, நீளமாக வளர்கிறது. கலாக்காயில் உள்ள ஊட்டச்சத்துகள் முடி உதிர்வு, முடி உடைவது போன்றவற்றைக் குறைக்கிறது.
கலாக்காயின் வேரை 50 கிராம் எடுத்துக்கொண்டு அரை லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைக்க வேண்டும். அந்தத் தண்ணீர் 100 மில்லி ஆக சுண்டக் காய்ச்சிய பின் எடுத்து வடிகட்டி, பெண்கள் காலை மாலை இருவேளையும் 50 மில்லி எடுத்துக்கொண்டால் கருப்பையில் உள்ள அழுக்குகள் வெளியேறும்.
இதில் போதுமான அளவு விட்டமின் சி இருப்பதால் காய்ச்சலின் வீரியத்தை குறைக்கிறது. இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்கள் காய்ச்சலுக்கு எதிரான கிருமிகளை எதிர்த்து போரிடுகிறது. 10 மில்லி கிராம் அளவு இந்த பழத்தை எடுத்துக் கொண்டாலே போதும் காய்ச்சல் தானாக குறைந்து விடும்.
இதிலுள்ள மக்னீசியம் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள், செரோடோனின் சுரப்பிற்கு உதவுகிறது. இதனால் ஒட்டுமொத்த மூளையின் திறனும் அதிகரிக்க்கிறது.
கலாக்காயை ஜூஸ் போட்டு குடித்து வந்தால், இதய தசைகளின் வலிமை அதிகரித்து, உங்கள் இதயமும் ஆரோக்கியமாக இருக்கும்.