வெள்ளியில் கொலுசு அணிவதன் காரணம் இதுதானா?

தடிமனான வெள்ளி கொலுசு
தடிமனான வெள்ளி கொலுசு

நகைகள் என்பது நம் முன்னோர்கள் காலத்தில் இருந்து முக்கியமான ஒன்றாக கருதப்பட்டது வந்துள்ளது. தங்கம், வெள்ளி நகைகள் அணிவது நம் உடலின் ஒவ்வொரு உறுப்புகளையும் பராமரிக்க உதவுகிறது. நகைகள் .

பொதுவாக எல்லா நகைகளும் தங்கத்தில் அணியும் நாம் காலில் அணியும் நகைகளை மட்டும் ஏனோ வெள்ளியில் தான் அணிகிறோம். அதற்கு காரணம் தங்கதில் மகாலக்ஷ்மி இருப்பதாக நம் முன்னோர் கூறியுள்ள காரணத்தால் நாம் காலில் தங்கதில் நகை அணிவது இல்லை.

இந்தியாவில் வெள்ளிக்கு ஒரு தனி மதிப்பு உள்ளது. வெள்ளி நம் உடம்பிரக்கு குளிர்ச்சி தரும் ஒரு பொருள். நகை ஒவ்வாமை போன்ற உபாதைகள் வெள்ளியால் வருவதில்லை என்று ஆயுர்வேதம் சொல்கிறது.

தடிமனான வெள்ளி கொலுசு
தடிமனான வெள்ளி கொலுசு

வெள்ளி நகை நம் ஆயுளை விருத்தி செய்ய கூடியவை. நம் உடல் சூட்டை குறைத்து குளிர்ச்சியாக்கி சாருமத்தையும் ஆரோக்கியமா வைக்க உதவுகிறது. உணர்ச்சி வசப்படுதல் என்பது எப்போதும் ஆண்களை விட பெண்களுக்கு அதிகம்.

வெள்ளி கொலுசு நம் குதிகால் நரம்பினனை தொட்டு கொண்டிருப்பதால் குதிகாலின் பின் நரம்பின் வழியாக மூளைக்கு செல்லும் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துகிறது. அது மட்டும் இல்லை பெண்களின் இடுப்பு பகுதியை உறுதிப்படுத்துவதற்கும் நாம் அணியும் வெள்ளி கொலுசு உதவுகிறது.

பழங்காலத்தில் மாம்பிஞ்சு கொலுசு, அத்திக்காய் கொலுசு, ஆலங்காய் கொலுசு என பல வடிவமைப்புகளில் கொலுசு அணிந்துள்ளார்கள். அது மட்டும் அல்லாமல் பழங்காலத்தில் பெண்கள் காலில் காப்பு, தண்டை, சிலம்பு போன்ற தடிமனான அணிகலங்களை அணிந்து வந்தனர்.

இப்போது அதை எல்லாம் யாரும் அணிவது இல்லை. ஆனால், இன்னும் மலை சாதி மக்கள் அதிக எடையுள்ள காப்பு போல் தடிமனான வெள்ளி கொலுசை அணிகிறார்கள்.

கொலுசு
கொலுசு

சிறுவயதிலிருந்தே குழந்தைகளுக்கு கொலுசு அணிவித்து விடுக்கின்றோம். குழந்தைகள் நடக்கும்போது எப்போதும் கொலுசு சங்கீதம் போல் கேட்க வேண்டும் என்பதாலும் குடும்பதினர் குழந்தைகளின் ஒவ்வொரு அசைவுகளை கண்காணிப்பதர்க்கும் கொலுசு அணிவிக்கப்படுகிறது .

பரம்பரியமாகவே நகைகள் அணிவது என்பது முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. தடிமனான கொலுசு அணிவதன் மூலம் கர்ப்பப்பை இறக்க பிரச்சனையை தீர்க்கலாம். கல்லீரல், மண்ணீரல், பித்தபை, சிறுநீரகம், சிறுநீர்ப்பை, வயிறு போன்ற மிக முக்கிய உறுப்புகளின் செயல் திறனை தூண்டி விடும் அற்புதமான அணிகலன் கொலுசு .

நகைகள் எப்பொழுதும் நம் உடலை தொட்டுக்கொண்டிருப்பதால் நாளடைவில் உடலின் அழகை அதிகரிக்கும் ஆற்றலுள்ளது. அதாவது, நமக்கு நோய்கள்உருவாவதை தடுப்பதற்கு மருந்துகளை உபயோகிப்பதை விட நகைகளை நாம் அணிந்தால் அது நல்ல பயன் தரும்.

எனவே பெண்கள் எல்லோரும் வெள்ளி கொலுசு அணிவதை ஒரு வழக்கமாக கொள்ள வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com