அடர்த்தியான புருவம் பெற அவசியம் இத தெரிஞ்சுக்கோங்க!

Dark eyebrows
Dark eyebrows
Published on

முகத்திற்கு கண்கள் அழகு சேர்க்கும். அந்த கண்களுக்கு அழகு சேர்ப்பதில் புருவங்களுக்கு தனி இடம் உண்டு. குறிப்பாக, சிறிய முகத்தோற்றம் கொண்டவர்களுக்கு அடர்த்தியான புருவங்கள் கூடுதல் அழகைத் தரும். இயற்கையான முறையில் கண் புருவங்களை அடர்த்தியாக வைத்திருப்பது எவ்வாறு எனக் காண்போம்.

* வெங்காயச் சாறு : வெங்காயத்தை மிக்ஸியில் அடித்து சாறெடுத்து புருவத்தில் தடவி காயவைத்து, பின் அதனைத் துடைத்து, எலுமிச்சை சாற்றை புருவத்தின் மீது பூசிவிட்டுத் தூங்கவும்.

* வெந்தயம் : வெந்தயத்தை ஊற வைத்து, அதனை நைஸாக அரைத்து இரவில் புருவத்தில் பூசி 15 நிமிடம் கழித்து கழுவவும். இந்த முறையைத் தினமும் செய்து வந்தால் பலன் தெரியும்.

* எலுமிச்சைத் தோல் : எலுமிச்சைத் தோலைத் துருவி வெயிலில் காய வைக்கவும். ஒரு கிண்ணத்தில் தேங்காய் எண்ணெய் 1 ஸ்பூன், விட்டமின் ஈ கேப்ஸ்யூல் மற்றும் அரை ஸ்பூன் காய்ந்த எலுமிச்சைத் தோல் போன்றவற்றைக் கலக்கி தினமும் இரவில் மஸ்காரா பிரஷ் மூலம் புருவம் மற்றும் கண் இமைகளில் தேய்த்து வரவும்.

* விளக்கெண்ணெய் : இரவில் தூங்குவதற்கு முன் விளக்கெண்ணெயை சூடுபடுத்தி அதில் கறிவேப்பிலை பொடியைச் சேர்த்து குளிர வைத்து, வெதுவெதுப்பானதும் புருவங்களில் தடவி லேசாக மசாஜ் செய்து வரவும்.

* வேஸலின் : அரை ஸ்பூன் அளவு வேஸலின் எடுத்து, அதனுடன் 2 ஸ்பூன் அளவு ஆலிவ் எண்ணெய் சேர்த்து நன்றாகக் கலந்து புருவங்கள் மீது தடவி லேசாக மசாஜ் செய்து வரவும்.

* கற்றாழை :  கற்றாழை ஜெல்லை அரை ஸ்பூன் எடுத்து, அதில் சம அளவு விளக்கெண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெய் சேர்த்து நன்றாகக் கலக்கி புருவத்தில் தடவி சில நிமிடங்கள் மசாஜ் செய்யவும். பின்பு அரைமணி கழித்து கழுவவும்.

* தேங்காய்ப்பால் : நல்லெண்ணெய் அரை ஸ்பூன் எடுத்து அதே அளவு தேங்காய்ப்பால் கலந்து புருவத்தில் தடவி மசாஜ் செய்து காய்ந்ததும் கழுவவும். தினமும் இரவில் செய்துவந்தால் பலன் அதிகம்.

இதையும் படியுங்கள்:
கோடைகாலம் வந்தாச்சு! எண்ணெய் சருமத்தை சமாளிக்கணுமே!
Dark eyebrows

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com