சமையலுக்கு தேங்காய் பயன்படுத்துவதில் சில டிப்ஸ்!

சமையலுக்கு தேங்காய் பயன்படுத்துவதில் சில டிப்ஸ்!
Published on

தினசரி உணவில் பல வகைகளில் தேங்காய் தேவைப்படுகிறது. அதைப் பற்றி சில விஷயங்கள் பார்ப்போம்.

தேங்காயை பத்து நிமிடங்கள் நீரில் ஊற வைத்துவிட்டு பிறகு உடைத்தால் சரி பாதியாக உடையும். முக்கண் உடைய கீழ் பாகத்தை முதலில் துருவி விட வேண்டும். ஏனெனில் முதலில் அதுதான் அழுகும்.

தேங்காயை உடைத்து சிறிது நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்து துருவினால் துருவல் சீராக இருக்கும்.

தேங்காயை அரை மணி நேரம் நீரில் ஊற வைத்தால் அதன் நாரை சுலபமாக நீக்கிவிடலாம். பாத்திரம் தேய்க்க அதை பயன்படுத்திவிட்டு எறிந்து விடலாம்.

உடைத்த தேங்காய் காய்ந்து போனால் அதில் பாலை ஊற்றி பத்து நிமிடம் கழித்து பயன்படுத்தினால் புதிது போல் ஆகிவிடும்.

தேங்காயை நிமிர்த்தி வைத்தால் கெடாமல் இருக்கும். ஃப்ரிட்ஜில் வைத்தாலும் பல நாட்கள் கெடாமல் இருக்கும்.

உடைத்த தேங்காயை துண்டுகளாக நறுக்கி வெயில் காய வைத்து எடுத்து வைக்கலாம். துருவியும் காய வைக்கலாம். பல நாட்கள் கெடாமல் இருக்கும்.

தேங்காயை நெருப்பு மீது காட்டி எடுத்து உடைத்தால் சரிபாதியாக உடையும்

மீந்து போன தேங்காய் மூடியில் உட்புறம் உப்பை தடவி வைத்தால், மூன்று நாட்கள் கெடாமல் இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com