தென்னக ரயில்வேயின் முதல் திருநங்கை டிக்கெட் பரிசோதகர் – சிந்துவின் சாதனை!

தென்னக ரெயில்வே துறை...
தென்னக ரெயில்வே துறை...

தென்னக ரயில்வே துறையில் முதல் திருநங்கை டிக்கெட் பரிசோதகராகப் பணியேற்றுள்ளார் திருநங்கை சிந்து. மதுரை ரயில்வே கோட்டத்தில் உள்ள திண்டுக்கல் சந்திப்பு ரயில் நிலையத்தில் ரயில் டிக்கெட் பரிசோதகராக நியமனம் பெற்றுள்ளார். அவருக்கு வயது முப்பத்தியேழு. இதற்கென அவர் கடந்து வந்துள்ள பல்வேறு சிரமங்களையும், தென்னக ரயில்வே துறையின் மதுரை கோட்ட எஸ்ஆர்எம்யூ சங்க தோழர்களின் ஒத்துழைப்பையும் வழிகாட்டுதலையும் மிகுந்த நன்றியுடன் நினைவுபடுத்தி பேசுகிறார்.

Q

உங்கள் பூர்விகம், பள்ளிப் படிப்பு குறித்து...

டிக்கெட் பரிசோதகர் சிந்து...
டிக்கெட் பரிசோதகர் சிந்து...
A

நான் பிறந்தது நாகர்கோயில். அப்பா கணபதி. அம்மா ராமலெட்சுமி. எனக்கு ஒரு அக்கா, ஒரு தங்கை. என் அப்பா திருவனந்தபுரம் கோட்டம் எர்ணாகுளத்தில் ரயில்வேயில் வேலை பார்த்து வந்தார். நான் பிளஸ் டூ தேர்ச்சி பெற்றேன். எனது பதினேழு வயதில் என் அப்பா இறந்துவிட்டார். அதனால் வாரிசு அடிப்படையில் சிந்தன் (அப்போது நான் ஆண்) என்ற நான் ரயில்வே துறையில் எர்ணாகுளத்தில் வேலைக்கு நியமிக்கப்பட்டேன்.

Q

எர்ணாகுளத்தில் எத்தனை ஆண்டுகள் வேலையில் இருந்தீர்கள்?

A

ர்ணாகுளம் என்று மட்டுமல்ல கேரளாவின் பல ஊர்களிலும் ஆறு ஆண்டுகள் ரயில்வேயில் வேலை செய்து வந்தேன். அதன்பின்னர் 2௦௦9ல் மதுரை கோட்டம் திண்டுக்கல் ரயில் நிலைய சந்திப்புக்கு மாறுதலாகி வந்தேன். உயர் மின் அழுத்தப் பிரிவில் பணியாற்றினேன். திண்டுக்கல்லில் பணியில் இருந்தபோது சில மாதங்களில் என் உடலில் சிற்சில மாற்றங்கள் உருவாகின. அதனை நானே உணர்ந்துகொண்டேன். இங்கு வந்து வேலை செய்யவும், வேலைக்கு வந்து போகவும் என் மனதுக்குள் மிகவும் சங்கடப்பட்டேன். என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யப் போகிறோம்? என்று என் மனம் அப்போது தவியாய்த் தவித்தது.

Q

அப்புறம் என்னதான் செய்தீர்கள்?

A

துபோன்று உடலில் சிற்சில மாற்றங்கள் ஏற்படத் தொடங்குகின்ற மற்றவர்கள் செய்ததையேதான் நானும் செய்தேன். 2௦1௦ல் என் வீட்டை விட்டு வெளியேறினேன். அப்போது வீட்டை மட்டுமல்ல, வேலையை விட்டும் நானாகவே வெளியேறி விட்டேன். திருநங்கைகள் சிலருடன் சேர்ந்து வாழத் தொடங்கினேன். நம் வாழ்க்கை இப்படியே போய்விடுமா என்று கவலைப்படவும் செய்தேன். பலரும் எனக்கு ஆறுதல் அளித்தார்கள். அறுவை சிகிச்சை செய்துகொண்டு திருநங்கையாக மாறிட வேண்டும் என முடிவு எடுத்தேன். பணம்? இரண்டு ஆண்டுகள் பல சிரமங்களுடன் பணம் சேர்த்தேன். திருநங்கையாக அறுவை சிகிச்சையும் செய்து கொண்டேன். திருநங்கை சிந்து ஆக மாறினேன்.    

இதையும் படியுங்கள்:
Black Tiger: ஒரிசாவில் மட்டுமே காணப்படும் அதிசய புலி.
தென்னக ரெயில்வே துறை...
Q

பின்னர் எப்படி மீண்டும் ரயில்வே துறை வேலைக்கு வந்து சேர்ந்தீர்கள்?

A

ன்னை நானே திடப்படுத்திக்கொண்டேன். நாம் ஏன் மீண்டும் ரயில்வே துறை வேலைக்கே முயற்சிக்கக் கூடாது என யோசித்தேன். 2௦12ல் நேரில் திண்டுக்கல் ரயில் நிலைய சந்திப்புக்கு வந்தேன். என் நிலையினைப் பழைய என் சக தோழர்களிடம் விரிவாக எடுத்துக்கூறினேன். ரயில்வே மதுரைக் கோட்ட எஸ்ஆர்எம்யூ தலைவர் செந்தில்குமார், செயலாளர் ஜெயம் ரபீக் மற்றும் சங்கத்தின் முக்கிய நிர்வாகிகளிடம் தயவுசெய்து எனக்கு உதவுங்கள் எனக் கோரினேன். எஸ்ஆர்எம்யூ சங்கத்தின் செயற்பாட்டாளர்கள்தான் எனக்கு மிகுந்த நம்பிக்கை தந்து பேசினார்கள். உடனே வழிகாட்டி எனக்கு உதவவும் முன் வந்தார்கள். 2௦12ல் மீண்டும் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் பணிக்கு சேர்ந்தேன். டெக்னீசியன் பணி எனக்குத் தரப்பட்டது. இரண்டு, மூன்று தடவையாக ப்ரமோசன்களும் கிடைத்தன. 2௦2௦ல் மீண்டும் எனக்கு ஒரு துயரம் வந்தது.

Q

என்ன துயரம்? அதில் இருந்து எவ்விதம் மீண்டீர்கள்?

A

ன் வலது கை ஒரு விபத்துக்கு உள்ளானது. அப்போதும் எனக்கு எஸ்ஆர்எம்யூ சங்கம்தான் உதவியது. துறை சார்ந்து மேலிடத்தில் எனக்காகப் பரிந்து பேசி, Non Technican Job  பெற்றுத் தந்தார்கள். எனக்குப் பொதுமக்களை ரயிலில் சந்தித்துப் பணியாற்றும் வேலை மீதாகக் கவனம் சென்றது. டிடிஇ எனப்படும் ரயில் டிக்கெட் பரிசோதகர் தேர்வுக்கு படிக்கத் தொடங்கினேன். இரண்டு மாதம் ட்ரையினிங் வகுப்புக்கும் சென்றேன். தேர்வும் எழுதினேன். இரண்டிலுமே தேர்ச்சி பெற்றேன். அதன் பின்னரே சமீபத்தில் திண்டுக்கல் ரயில் நிலைய டிக்கெட் பரிசோதகராகப் பணி நியமனம் செய்யப்பட்டேன். தென்னக ரயில்வேயின் முதல் திருநங்கை டிக்கெட் பரிசோதகராக எனக்குப் பணி வாய்க்கப் பெற்றதில் மதுரைக் கோட்ட ரயில்வே நிர்வாகத்துக்கும், மதுரைக் கோட்ட எஸ்ஆர்எம்யூ சங்கத்துக்கும் ரொம்பவே நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன்.”

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com