அரியவகை மூலிகையான மணத்தக்காளிக் கீரையின் சிறப்புகள்!

மூலிகை சமையல்!
அரியவகை மூலிகையான மணத்தக்காளிக் கீரையின் சிறப்புகள்!

ணத்தக்காளிக் கீரையினுடைய இலை, காய், கனி பகுதிகள் மருத்துவக் குணம் கொண்டவை. இக்கீரையைப் பருப்புச் சேர்த்து மசியல், பொரியல் செய்து சாப்பிடலாம். கீரையையும், இளந்தண்டுகளையும் சாறாக மாற்றி ஒரு வேளைக்கு ஆறு மில்லி வீதம் அருந்தலாம். 

கீரையைப் போலவே பழமும் சக்திவாய்ந்தது. காச நோயாளிகள் இப்பழங்களைத் தினமும் சாப்பிடுவது நல்லது. பசியை நன்கு தூண்டும். கரு வலிமை பெற இப்பழம் பயன்படுகிறது. பிரசவம் எளிதாக நடைபெறவும் பயன்படுகிறது. ஆண்கள் தாது பலம் பெற இப்பழத்தை அவசியம் சாப்பிடலாம். தேமல், வீக்கங்கள், பருக்கள், கொப்புளங்கள் குணமாக இக்கீரைச் சாற்றைத் தடவலாம்.

கீரைக் கூட்டுக்குப் பாசிப் பருப்புச் சேர்த்துச் சாப்பிட்டால் வயிற்றுப்புண் ணையும் வாய்ப்புண்ணையும் குணப்படுத்தும்.

மணத்தக்காளி தமிழ்நாட்டின் சில பகுதிகளில் சுக்குட்டிக் கீரை எனவும் அழைக்கப்படுகிறது. இதில் அடங்கி யுள்ள சத்துக்கள் நீர்ச்சத்து, புரதம், கொழுப்பு, சுண்ணாம்பு மற்றும் பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்கள். இதை உட்கொள்வதன் மூலம் இதயம், நுரையீரல், கல்லீரல், மண்ணீரல், கணையம், வயிறு மற்றும் குடல், மூலநோய் தொடர்பான பல நோய்களுக்கு நிவாரணம் கிடைக்கிறது. எல்லா நோயையும் நீக்கி வாழ்க்கையை மணக்கச் செய்யும் சர்வரோக நிவாரணி மணத்தக்காளி மூலிகை.

மேடைப் பேச்சாளர்கள், பாடகர் களுக்குத் தொண்டைக் கட்டிக் கொள்ளும் வாய்ப்பு அதிகம். இவர்கள் மணத்தக்காளிக் கீரையைத் தினமும் சாப்பிட்டு வருவது நல்லது. 

நாள்பட்ட நோய்கள் குணமாக இக்கீரைச் சாற்றை மோர், தயிர், பால், இளநீர் போன்ற ஏதாவது ஒன்றில் சேர்த்துத் தினமும் அருந்தி வரவேண்டும்.

முதலில் கீரையை ஆய்ந்து கழுவிக் கொள்ளவும். புளியை நூறு மில்லி தண்ணீரில் கரைத்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாயை இரண்டிரண்டாக நறுக்கி வைக்கவும். ஒரு தம்ளர் தண்ணீர் விட்டு மஞ்சள் பொடி சேர்த்து வேக வைத்த பயத்தம் பருப்புடன்  பெருங்காயம், பூண்டு, கீரை, உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். அடுப்பில் வாணலியை வைத்துத் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.

வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் கூடவே தக்காளியைப் போட்டு எண்ணெய்ப் பிரியும் வரை வதக்கவும். பின் கரைந்துள்ள புளிக் கரைசலை ஊற்றிப் பச்சை வாசனை போகும் வரை கொதிக்கவிடவும். கொதிக்கும் புளிக்கரைசலுடன் கடைந்து வைத்துள்ள கீரையைக் கலந்து மேலும் பத்து நிமிடம் கொதிக்க விட வேண்டும். பின் கீரைக் குழம்பை இறக்கி வைத்து, ஒரு டீஸ்பூன் எண்ணெயில் காய்ந்த மிளகாயைக் கிள்ளிப்போட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம் போட்டுத் தாளித்தால் ருசியான மணத்தக்காளிக் கீரைக் குழம்பு ரெடி.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com