சுளுக்கு எடுக்கணுமா?

பாட்டி வைத்தியம்
சுளுக்கு எடுக்கணுமா?
Published on

கை, கால்களில் சுளுக்கு பிடித்து உள்ளவர்கள், மிளகுத் தூளையும், கற்பூரத்தையும் நீரில் போட்டுக் கொதிக்க வைத்து, அந்தத் தண்ணீரைத் துணியில் நனைத்துச் சுளுக்கு பிடித்துள்ள இடத்தின் மீது ஓற்றி எடுங்கள் சுளுக்கு பறந்து விடும்.

காய்ச்சிய பாலை அடுப்பிலிருந்து இறக்கி வைத்து, அதில் அடுக்கு செம்பருத்திப் பூ இதழ்கள் ஐந்து போட்டுப் பத்து நிமிடம் பாலை மூடி வைத்து, பின் வடிகட்டி விடவும். பால் சிவப்பாகி இருக்கும். கொஞ்சமா இனிப்பு சேர்த்து வடிகட்டி காலையிலும், மாலையிலும் குடிக்கவும். இது மாதவிடாய் கோளாறுகளை சரி செய்கிறது. குடல் இறக்கம், கர்ப்பப்பை இறக்கம் ஏற்படாமலும் தடுக்கிறது.

ல்லாரை இலைப்பொடி இரண்டு கிராம் எடுத்து, காய்ச்சிய நூறு மில்லி சூடான பாலில் கலந்து, மூடி வைத்து பத்து நிமிடங்கள் சென்று இனிப்பு சேர்த்து, வடிகட்டி தினசரி காலை, மாலை இருவேளையும் குடிக்கவும். யானைக்கால், வலிப்பு, மலடு, பக்கவாதம், மூலம், மூட்டுவலி, இரத்தக்குழாய் தடிப்பு போன்ற நோய்கள் வராமல் வல்லாரை சுவை நீர் தடுக்கும்.

சிறிது ஆளி விதையை நீரில் கொதிக்கவைத்தால் பசை மாதிரி ஆகிவிடும். இதனுடன் இயற்கை ஆன்டி பயாடிக்குகளான எலுமிச்சைச் சாறு மற்றும் தேன் சேர்த்துப் பருகிவர தொண்டை வீக்கம் குறையும்.

ண்ணில் நீர் வடிந்து, கலங்கி வலித்தால் கொய்யா மர இலைகளை நான்கைந்து பறித்துவந்து, தோசைக்கல் அல்லது வாணலியைச் சூடாக்கி அதன்மேல் இலைகளை மாற்றி மாற்றிப் போட்டு கண்மேல் ஒத்தடம் வைக்க, ஒருநாளில் மூன்று முறை செய்ய கண்டிப்பாக இந்தப் பிரச்னை சரியாகிவிடும்.

சீதாப்பழ விதைகளைப் பொடித்து கடலை மாவுடன் கலந்து, எலுமிச்சம் பழச்சாற்றில் குழைத்து தலையில் தேய்த்து, ஒரு மணி நேரம் கழித்து குளித்தால், தலைமுடி உதிராது. தலையிலுள்ள பொடுகு, ஈறுகளை அழிக்கும்.

ற்றைத் தலைவலி ஏற்பட்டால், சிறிது கடுகுடன் பசும்பால் தெளித்து விழுதாக அரைத்துப் பற்றிட, ஒற்றைத் தலைவலி குணமாகும்.

ரச இலைச் சாறுடன் மஞ்சள்தூள் கலந்து காலிலுள்ள பித்த வெடிப்புகளின் தடவி வர வெடிப்புப் புண்கள் ஆறும்.

வாழைத்தண்டை சுட்டு அதன் சாம்பலை தேங்காய் எண்ணையில் கலந்து தடவி வர தீப்புண், சீழ்வடிதல் மற்றும் காயங்கள் விரைவில் குணமாகும்.

நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com