மாநிலப் பொங்கல்!

மாநிலப் பொங்கல்!

பொங்கல் என்ற அறுவடைத் திருநாள் தமிழகத்தில் மட்டுமல்ல, நாடு முழுவதும் பல்வேறு வகைகளில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த திருவிழாக்கள் அனைத்தும் ஒரே காலத்தில் கொண்டாடப்படுவது சிறப்பு. மற்ற மாநிலங்களில் பொங்கல் திருநாளை இப்படி கொண்டாடுகிறார்கள்.

போகாலி பிஹு (அசாம்)

சாம் மாநிலத்தில் பிஹு பண்டிகை, ஆண்டில் மூன்று முறை கொண்டாடப்படுகிறது. போகாலி பிஹு (ஜனவரி) போஹாக் பி (ஹுஏப்ரல்) கொங்காலிபிஹு (அக்டோபர்). ஜனவரி மாதம் கொண்டாடப்படும் போகாலி பிஹு பண்டிகையின் அடையாளமாக மரங்களில் மூங்கில் துண்டு அல்லது நெற்கதிர்களை வைத்து கட்டுவார்கள். ஆற்றங்கரையை ஒட்டிய வயல் பகுதியில் வைக்கோலில் தற்காலிக கூரையை வேய்ந்து, பக்கத்தில் நெருப்பு மூட்டி உணவு சமைத்து கூட்டாகச் சாப்பிடுவார்கள். பிறகு இரவு முழுவதும் பாடல்களைப் பாடி மகிழ்ந்து பின் அடுத்த நாள் அக்னி பகவானை வணங்குவார்கள்.

பட்டம் விடும் திருவிழா (குஜராத்)

குஜராத்தில் உத்தராயண அறுவடைத் திருவிழா மூன்று நாட்களுக்கு நடைபெறும். அப்போது சின்னக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பட்டம் விட்டு மகிழ்வார்கள். வானம் வண்ணமயமாக பல பெரிய பெரிய உருவங்களைக் கொண்ட பலூன்களால் வண்ணமயமாக காட்சியளிக்கும். மாலையில் பட்டங்களும் மெழுகுவர்த்தியையும் ஒட்டி வைத்து அனுப்புவார்கள். வண்ணத் தோரணங்கள் எல்லாம் தீபத் தோரணங்களாக வானத்தில் மின்னும். அன்று இரவு பொரி உருண்டை , கிச்சடி செய்து ஒன்றாக அமர்ந்து உண்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

சுக்கி (கர்நாடகா)

ர்நாடகா அறுவடைத் திருநாளின் முக்கிய அம்சம் எள்ளுருண்டை. அத்துடன் சர்க்கரை அச்சு எனப்படும் இனிப்பு. கரும்பை தட்டில் வைத்து வழிபடுவார்கள். இந்த இனிப்பை பெண் குழந்தைகள், பக்கத்து வீடுகளுக்கு எடுத்து சென்று கொடுப்பார்கள். 'இனிப்பை சாப்பிட வேண்டும் நல்லதையே பேச வேண்டும் 'என்பது கன்னட பொங்கல் பழமொழியாகும்.

மேலும், நாட்டின் பல பாகங்களிலும் மகர சங்கராந்தி அன்று தில்குட் எனப்படும் எள்ளும் , வெல்லமும் கலந்த எள்ளுருண்டை வழங்கப்படுகிறது. சொல்லிலும், செயலிலும் இனிமையாக நடந்து கொள்ள வேண்டும் என்பதனை இது காட்டுகிறது. மகாராஷ்டிராவில் கணவன், மனைவியை ஜோடியாக உட்கார வைத்து, எள்ளுருண்டையை வாயில் ஊட்டி விடுவார்கள்.

லோஹ்ரி (பஞ்சாப்)

ஞ்சாபில் ஜனவரி மாதம் கொண்டாடப்படும் விழா லோஹ்ரி. மாலையில்தான் இந்த விழா களைகட்டும். அப்போது வயல்களில் நெருப்பு மூட்டி , 5 முறை வட்டமடித்து நடனமாடி அறுவடை செய்த தானியங்கள், பொரி ஆகியவற்றை படைத்து அக்னி பகவானை வணங்கி, நாட்டுப் புற பாடல்களை பாடுவார்கள். பஞ்சாபியர்களின் புகழ் பெற்ற பாங்க்ரா நடனம் இதன் முக்கிய அம்சம் ஆகும். பிறகு, பல தானியங்கள் சேர்த்து செய்த சப்பாத்தி, வெந்தயக்கூட்டு செய்து சாப்பிடுவது சிறப்பு.

சூரியப் பொங்கல் (தமிழ்நாடு)

ங்கராந்தி அல்லது கதிரவன் பொங்கல் எனப்படும் இந்நாளில் பெண்கள் தலைக்கு நீராடி , புத்தாடை அணிந்து நெற்றியில் குங்குமம் துலங்க புதுப் பானையில் மஞ்சள் கட்டி, நடு முற்றத்தில் சூரியனின் கதிர்கள் படும் இடத்தில் வைத்து அடுப்பு மூட்டி பொங்கலிடுவது வழக்கம். அன்று இறைவனுக்கு சர்க்கரைப் பொங்கல் படைத்து, கரும்பு, வாழைப்பழம், வெற்றிலை பாக்கு வைத்து, கதிரவனை நோக்கி தீப தூபம் ஏற்றி வழிபடுவது மரபு.

குடும்பத்தினர் அனைவரும் ஒன்று கூடி வணங்குவது சிறப்பு. இவ்வாறு பொங்கல் பண்டிகை அவரவர் முறைப்படி பல்வேறு மாநிலங்களிலும் மகிழ்ச்சியாக, பாரம்பரிய முறைப்படி ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com