வயிறு எரியுது டாக்டர்...

ஜோக்ஸ்!
வயிறு எரியுது டாக்டர்...

“வயிறு எரியுது டாக்டர்”

“எப்போதிலிருந்து?”

“உங்க நர்ஸ் பக்கத்துப் பெட்டுக்காரனோட சிரிச்சு சிரிச்சுப் பேசினதைப் பார்த்ததிலிருந்து டாக்டர்!”

 **************************************

“அந்த டாக்டர் போலின்னு கண்டுபிடிச்சிட்டியா... எப்படி?”

“கால்ல வெடிப்பு இருக்குதுன்னேன். உள்ளே போனவர் ‘கம்’ பாட்டிலை எடுத்துட்டு வந்து ஒட்டப்பாக்குறாரு.”

  **************************************

“எங்கிட்ட சொல்லாம வேலைக்காரனுக்கு ஏன் உங்கச் சட்டையைக் கொடுத்தீங்க?”

“ஏன் உனக்குச் சொல்லனும்?”

“நீங்கன்னு நெனச்சு அவன் முதுகிலே ஓங்கி அடிச்சுட்டேன்.”  

   **************************************                                                       “நான் இப்ப தினமும் வாக்கிங் போறேன்னா அதுக்கு இந்த டாக்டர்தான் காரணம்!”

“ஏன் அப்படிச் சொல்றே?”

“முதல்ல கார்ல வந்தேன். ட்ரீட்மெண்ட்டுக்குச் செலவு செஞ்சு செஞ்சு இப்ப நடக்கும்படி ஆயிடுச்சு!”

 ************************************** 

"அந்த நடிகை பயங்கரமா நடிக்கிறாங்க சிஸ்டர்!"

"ஏன் டாக்டர் அப்படி சொல்றீங்க?" "பல்செட்டை கட்டிக்கிட்டு வந்து, பல் கூசுதுன்னு வாய் கூசாமல் சொல்றாங்க சிஸ்டர்...!"

**************************************

(பெண் பார்க்கும் இடத்தில் :)

"என்னை மேரேஜ் பண்ணிக்க உனக்கு இஷ்டம்தானே..? நீ வேற யாரையும் காதலிக்கலையே...?"

"உங்களைக் கட்டிக்க இஷ்டம்தான்... ஆனா வேற எதுவும் என்கிட்டே கேக்காதீங்க...!"

************************************** 

"கல்யாணத்துக்கு முந்தி, 'யாரையாவது காதலிச்சிருக்கியா' ன்னு கேட்டதுக்கு ஏன் செல்லம் பதிலே சொல்ல மாட்டேங்கிறே?"

"ஆமாம்னு உண்மையைச் சொன்னா, உனக்கு மனசு சங்கடப்படும்; இல்லைனு பொய் சொன்னா, எனக்கு மனசு உறுத்தும்... அதனாலதான்..!"

-விரேவதி தஞ்சை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com