

நமது நாட்டின் சுதந்திரத்திற்காக போராடியவர்களில் முக்கிய பங்கு வகித்த சுபாஷ் சந்திர போஸ் (Subhash chandra bose) பிறந்தது ஜனவரி 23 ம் தேதி 1897 வது வருடம். காந்திஜியிடம் ஏற்பட்ட கருத்து வேறு பாட்டால், தனியாக போராட்டத்தில் ஈடுபட்டார் அவரது வழியில். இவரது மனைவி பெயர் எமிலி ஸ்செங்கி (Emilie schenkl). இவர் ஆஸ்திரிய தேசத்தை சார்ந்தவர். எமிலிக்கும், சுபாஷ் சந்திர போஸ் இருவருக்கும் காதல் திருமணம் நடைப்பெற்றது.
இருவரும் முதலில் சந்தித்தது ஸ்டேனோகிராப்பர் வேலைக்கு எமிலி இன்டெர்வியூவிற்க்கு சென்ற பொழுது. சுபாஷ் சந்திர போஸ் பிசியாக இருந்த பொழுதிலும், புத்தகம் எழுத முற்பட்டார். எழுதுவதை விட ஷார்ட் ஹாண்ட் டைப்ரைட்டிங் முறையில் எழுதினால் நேரம் சேமிக்கவும், யோசித்து புத்தகம் வடிவமைக்கவும் முடியும் என்ற எண்ணத்தில் தன் நண்பர் ஒருவர் உதவியுடன் ஸ்டேனோகிராப்பர் பணிக்கு நபர்கள் இன்டெர்வியூவிற்கு வர சொன்னார்.
வந்த இரண்டு பெண்களில் எமிலி அவரது நேர்த்தியான, வேகம் நிறைந்த துல்லியமாக பணி செய்யும் முறை சுபாஷ் சந்திர போஸ் அவர்களை வெகுவாக கவர, எமிலி அவருக்கு ஸ்டேனோகிரப்பராக தேர்ந்து எடுக்கப்பட்டார். எமிலி ஸ்டேனோகிராப்பி தவிர டெலிபோன் ஆப்பரேட்டர் மற்றும் போஸ் அவர்களுக்கு செகரட்டரியாகவும் பணி புரிந்தார்.
1934 ல் இவர்கள் சந்திப்பு வியன்னாவில் ஏற்பட்டது. இருவருக்கும் இந்திய முறைப் படி இரகசிய திருமணம் நடைப் பெற்றது. எமிலியின் தந்தைக்கு முதலில் சிறிதும் விருப்பமில்லை. பிறகு சுபாஷ் சந்திர போஸ் உடன் சந்தித்து அவரைப் பற்றி புரிந்துக் கொண்டதும் பச்சை கொடி காட்டினார் இருவரது திருமணத்திற்கும்.
23 வயதாகி இருந்த எமிலி பணிக்கு சுபாஷ் சந்திர போஸ்ஸிடம் சேர்ந்த பொழுது அவருக்கு வயது 36. இருவருக்கும் 13 வயது வித்தியாசம். இருந்தும், இவர்களுடைய காதல் சந்திப்பு தொடர்ந்து, திருமணத்தில் முடிந்தது. சுபாஷ் சந்திர போஸ் பெரும்பாலான நேரங்களில் பல நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு இருந்ததால், இருவரிடமும் கடித போக்கு வரத்திலேயே காலம் கழிந்தது.
1942 நவம்பர் 29 அன்று சுபாஷ் போஸ், எமிலிக்கு மகள் பிறந்தாள். 'அனிதா போஸ்' என்ற பெயர் சூட்டப்பட்டது. பெர்லினில் இருவரும் கடைசி முறையாக நேரில் சந்தித்துக் கொண்டனர், இருவரின் ஒரே மகள் அனிதா போஸ் பிறந்த சிறிது காலத்தில், ஒரே ஒரு முறை மட்டும் தான் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தனது அருமை மகளை பார்த்தார். சந்திர போஸ் மறைவிற்கு பிறகு அவரது மனைவி எமிலி போஸ் தன்னந்தனியாக தன் வாழ்க்கையை தொடர்ந்தார், வியன்னாவில். அவரது ஒரே குறிக்கோள் மகள் அனிதாவை நன்றாக வளர்த்து ஆளாக்க வேண்டும் என்பது.
சுபாஷ் சந்திர போஸ் மறைவிற்கு பிறகு அவரது சகோதரர் சரத் சந்திர போஸ் மற்றும் குடும்ப உறுப்பினர்கள், எமிலி போஸ் அவர்களை இந்தியாவிற்கு வந்து தங்களுடன் தங்கும்படி வேண்டு கோள் விடுத்தனர். அந்த வேண்டு கோளை நாசுக்காக மறுத்து விட்டார்.
ஆஸ்திரியாவில் தங்கி தன் பணியை தொடர்ந்து வந்தார். இந்தியாவிற்கு வந்ததே இல்லை. நேதாஜியுடன் நடந்த திருமணம் பற்றியும் வெளியுலகிற்கு தெரிவிக்காமல் தன் உடனே கடைசி காலம் வரை வைத்துக் கொண்டு 1996 ல் மறையும் வரை நேதாஜியின் நினைவுகளுடன் வாழ்க்கையை கழித்தார், 26 டிசம்பர் 1910 ல் பிறந்து 13 மார்ச் 1996 ல் மறைந்த எமிலி போஸ்.