கோடையில் வாட்டும் தசைப்பிடிப்பும் (Cramps) தீர்வுகளும்

கோடையில் வாட்டும் தசைப்பிடிப்பும் (Cramps) தீர்வுகளும்
Published on

காலையில் படுக்கையை விட்டு எழும்போது, உடற்பயிற்சியின் போது, படிக்கட்டில் ஏறும்போது, சிலருக்கு  பைக் போன்ற இருசக்கர வாகனத்தில் ஏறும் போது கூட தொடைப் பகுதியிலோ, கால்களிலோ, பாதங்களிலோ, கெண்டைக்காலிலோ, மின்னல் வெட்டுவதுபோல ஒரு வலி ஏற்பட்டு நரம்போடு சதையும் சுருண்டு கொள்ளும். ஒரு சில நிமிடங்களுக்கு வலி பாடாப்படுத்தும். சிலருக்கு நாள் முழுதும் வலி தொடரும். அதற்குப் பெயர் தான் தசைப்பிடிப்பு (Cramps).

கோடைக்காலங்களில் அதிகளவில் தசைப்பிடிப்பு தோன்றுகிறது. இதற்கு என்ன காரணம்?  உடலின் தசைகளில் நீர்சத்து குறையும் போதும், தாது உப்புகளின் அளவு குறையும் போதும் தசைப்பிடிப்பு ஏற்படும். கர்ப்பிணிகள், நாற்பது வயது தாண்டியவர்கள், முதியவர்களுக்கு அடிக்கடி தசைப்பிடிப்பு ஏற்படும். கடுமையான உடற்பயிற்சி செய்வோர், விளையாட்டு வீரர்களுக்கு கை, கால் போன்ற இடங்களில் அடிபடுவதாலும் தசைப்பிடிப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. உடலில் கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், மற்றும் எலக்ட்ரோலைட்டுகள்  குறைந்து போவதும் ஒரு காரணம்.  

தசை பிடிக்கும்போது, கால்களை மெதுவாக நீட்டி வைத்து தசை பிடித்த இடத்தை மசாஜ் செய்து கொடுக்க வேண்டும். மூச்சை சீராக உள் இழுத்து மெதுவாக வெளி விடவேண்டும்.கூடவே மிக முக்கியமாக தண்ணீர் குடிக்க வேண்டும். 

தசை பிடிப்பு விடுபட்ட பிறகும் தொடரும் வலிக்கு, மணலை சூடாக்கி துணியில் கட்டி  வலிக்கும் இடத்தில் ஒத்தடம் கொடுக்கலாம். பெரு விரலை தரையில் ஊன்றி நின்று வலிபட்ட இடத்திற்கு எடையை கொடுக்கும்போது வலியில் இருந்து விடுபடலாம். 

கால்சியம், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் சத்துகள் நிறைந்த பால், இளநீர், வாழைப்பழம், சர்க்கரை வள்ளிக்கிழங்கு, பப்பாளி, உப்பும் தண்ணீரும் கலந்த எலுமிச்சைசாறு போன்றவை தசை பிடிப்பை தடுப்பதற்கு அவசியமான எலக்ட்ரோலைட்டுகளின் சமநிலையை பராமரிக்க உதவுகின்றன. மேலும் உடலுக்குத் தேவையான தண்ணீர் குடிப்பதன் மூலமும் தசைபிடிப்புப் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com