1994ஆம் ஆண்டு உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியர் என்கிற பெருமைக்குரியவர் முன்னணி நடிகையான சுஷ்மிதா சென்.
1997ஆம் ஆண்டு ‘ரட்சகன்’ தமிழ்த் திரைப்படத்தில் தனது அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களிடையே பிரபலமானார். ‘முதல்வன்’ திரைப்படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் வெளியான ‘ஷக லக பேபி’ பாடலுக்கு அசத்தலான நடனத்தை ஆடி, அனைவரிடத்திலும் தனி வரவேற்பைப் பெற்றிருந்தார்.
தற்போது 46 வயதாகும் இவர் திருமணம் செய்துகொள்ளாமல், இரு பெண் குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.
கடந்த மார்ச் மாதம், தனக்கு மாரடைப்பு ஏற்பட்ட தகவலை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். தீவிர மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பிய சுஷ்மிதா, நல்ல உடல்நிலையில் இருப்பதாகத் தெரிவித்து, ஒரே வாரத்தில் உடற்பயிற்சியையும் மேற்கொண்டதோடு, பேஷன் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
உடல் நலம் சரியில்லாத காரணத்தினால் தன்னால் நிறுத்தப்பட்ட ‘ஆர்யா சீசன் 3’ வெப் சீரிஸில் தற்போது நடித்து முடித்தவர், ‘தாலி’ என்ற வெப் தொடரில் திருநங்கை கேரக்டரில் நடித்துள்ளார். திருநங்கை களுக்காக குரல் கொடுத்து வருபவரான ஸ்ரீகவுரி சாவந்த் என்கிற திருநங்கையின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து இந்த வெப் தொடர் உருவாக்கப்பட்டுள்ளது. ஸ்ரீகவுரி சாவந்த் ஆகத் தன்னை, கண்ணாடி முன்பு நின்று தனது சேலையை சரிப்படுத்தியவாறே அறிமுகமாகிறார்.
“உடல் நலத்தில் அவ்வப்போது கவனமாக இருங்கள்” என தனது ரசிகர்களுக்கு அன்பான எச்சரிக்கை அளித்து வருவது குறிப்பிடத்தக்கது. ரசிகர்களின் நலனில் அக்கறை காட்டி வருவது சிறப்பு.