மினி தொடர்கதை: அப்பாவின் டைரிக் குறிப்பு - அத்தியாயம் 2

மினி தொடர்கதை | Elderly man writing
மினி தொடர்கதை | Elderly man writingAI Image
கல்பனா ராஜகோபால்

கல்பனா எனும் நான் பள்ளிப் பருவத்திலிருந்தே என்னுள் இருக்கும் தமிழார்வத்தால் புத்தகம் வாசிப்பதிலும் கவிதை எழுதுவதிலும் அதிக ஈடுபாடு கொண்டுள்ளேன். என் கவிதைக்கு முன்னாள் ஜனாதிபதி திரு அப்துல் கலாம் ஐயா அவர்களிடம் இருந்து வாழ்த்துக் கடிதம் பெற்று உள்ளேன். என் கவிதை முதன் முதலில் மங்கையர் மலர் வெள்ளி விழா மலரில் வெளியாகி அதற்கு பரிசும் பெற்றேன். பணி ஓய்வுக்கு பிறகு என் எழுத்துப் பணியை கல்கி ஆன்லைனில் தொடந்துள்ளேன். எனக்கு வாய்ப்பு நல்கிய. கல்கிக் குழுமத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

Updated on
MM strip
MM strip

மரணமும் டைரிக் குறிப்புகளும்

வீட்டின் ஹாலில் வெள்ளைத் துணியால் மூடப்பட்டிருந்த மூர்த்தியின் உடலை அமைதியாகப் பார்த்துக்கொண்டு இருந்தனர் ஸ்வப்னாவும் லக்னாவும். சுற்றிலும் உறவினர்கள் மெதுவாகப் பேசிக்கொண்டிருந்தனர். ஆனால் ஸ்வப்னாவுக்கு அந்தச் சத்தங்கள் எதுவும் கேட்கவில்லை. அப்பா இறந்த செய்தி வந்தபோது அவள் மதுரையிலிருந்து அவசரமாக வந்திருந்தாள். காலை வரை தன்னிடம் போனில் பேசிக்கொண்டிருந்த மனிதர், மதியம் வரை கதவைத் திறக்காததால் பக்கத்து வீட்டு புஷ்பாக்கா வந்து பார்த்தபோது, சுஜாவின் புகைப்படம் முன் சாய்ந்தபடி மூர்த்தி அமைதியாக இருந்தாராம்.

அவரது கைகளில் ஒரு ஜாதி மல்லி பூ.

அதை கேட்டவுடனே ஸ்வப்னாவின் இதயம் உடைந்துபோனது.

அனைவரும் வெளியே இருந்தபோது, அவள் மெதுவாக அப்பாவின் அறைக்குள் வந்தாள். அந்த அறை இன்னும் சுஜா உயிரோடு இருந்த நாட்களைப் போலவே இருந்தது. சுவற்றில் சுஜாவின் புகைப்படம். அருகில் அன்று காலை போட்ட ஜாதிப்பூ மாலை. சிறிய பித்தளை விளக்கு. கட்டிலின் அருகில் நீட்டாக மடித்து வைக்கப்பட்டிருந்த வெள்ளை வேட்டி.

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com