கவிதை: தீபாவளி இங்கு பாங்காய் மிளிரட்டும்!

Diwali Poem
Diwali Poem
Published on

தீபாவளி இங்கு பாங்காய் மிளிரட்டும்!

தீபாவளித் திருநாள் தென்றலாய் 

நம்மை நெருங்கிடிச்சு!

தீயாய் மனதில் மகிழ்ச்சி 

வெள்ளமாய்ப் பொங்கிடிச் சு!

டிரெண்டிங் ஆன ஆடையெல்லாம் 

திகட்டிடவே வாங்கியாச் சு!

டமீல் டுமீல் பட்டாசெல்லாம் 

பெட்டிகளில் வந்திறங்கிடிச் சு!

அதிரசம் பூந்தி அதிரடித் தேன்குழல் 

ஜாங்கிரி பாதுஷா சப்தம் தராத சீடை

கைமுறுக்கு நெய்முறுக்கு கலகலக்கும் கலகலா

லட்டு ரவாலாடு லட்சணமாய் மைசூர்பாகு

அணிஅணியாய்த் திரண்டிருக்கும் அசார்டெட் இனிப்புகள்

வெங்காயம் ஓலையென்று விதவித பகோடாக்கள் 

கெட்டி உருண்டை பயத்தம் உருண்டை கிழங்குவகை சிப்ஸ்

பால்பேடா கஜூகத்லி பக்குவ மிக்சர்கள்

இப்படியாய் இனிப்பு காரங்களை ஏகமாய்ச் செய்திடுவர்!

அக்கா தங்கை வீடுகளுக்கு 

அன்புமிகக் கொண்ட 

அண்ணன் தம்பி அனைவருமே 

வரிசையாய்ப் படையெடுத்து 

வரிசை வைத்துக் கொடுத்துவிட்டு 

வகைவகையாய் விருந்துண்பர்!

உறவுகள் அத்தனையும் மேலும் 

உறுதிப்படும் பலமாக!

இப்படி நடப்பதெல்லாம் இருப்பவர் 

தம் குடும்பங்களில்! ....

குறைவான வசதியுள்ளோர் கோடிக் கணக்கில் 

உள்ள நம்நாட்டில் 

இல்லாதோர் இல்லங்களில் எப்பொழுதும் 

இருள்தானே குடியிருக்கும்!

இதையும் படியுங்கள்:
கவிதை: வெற்றிலை பெட்டி திறந்து; கொட்டை பாக்கெடுத்து...
Diwali Poem

ஆதரவற்ற குழந்தைகள் வாழும்

அனாதை இல்லங்களில் 

பரந்த உள்ளத்துடன் பணமும் 

கொண்ட சிலர் 

இத்திருநாளைக் கொண்டாடினால் இதயங்கள்

அமைதி பெறும்!

அத்தனை வீடுகளிலும் அதிரடியாய்

 பட்டாசு வெடித்தால்தான் 

அமைதியான தீபாவளி இங்கு 

அரங்கேறியதாய் அர்த்தம்!

உள்ளோர் அனைவருமே உதவிட 

முன் வந்தால் 

பண்டிகை உண்மையிலே பாங்காய் 

மிளிர்ந்து விடும்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com