கவிதை: உன்னைத்தான் மறந்தேனோ?

தாய் மற்றும் மனைவியின் அளவற்ற அன்பு, தியாகம், அர்ப்பணிப்பை நினைவுகூரும் ஒரு மனிதனின் மனதை உருக்கும் வரிகள்.
Mother and wife
Mother and wife Tamil poemImage credit: AI Image
Updated on
MM strip
MM strip

1. தாய்:

பத்து மாசம் சுமந்து பெத்தவளே  உன்னைத்தான் மறந்தேனோ?

நிலாவைக்காட்டி சாதம் ஊட்டிய உன்னைத்தான் மறந்தேனோ?

படிக்கவச்சு அழகு பார்த்தாயே உன்னைத்தான் மறந்தேனோ?

நீ பட்டினிகிடந்து என்பசிபோக்கினாயே உன்னைத்தான் மறந்தேனோ?

படிக்கவச்சு வேலைக்குத்தான் அனுப்பினாயே உன்னைத்தான் மறந்தேனோ?

 நிறைய பணம் சம்பளம் வந்ததும் மருமகளை தேடினாயே உன்னைத்தான் மறந்தேனோ?

அப்பா இறந்துபோக அரைஉடம்பாய் மெலிந்தாயே உன்னைத்தான் மறந்தேனோ?

பேரனை மடியில் போட்டு வளர்த்து வந்தாயே உன்னைத்தான் மறந்தேனோ?

தாய்க்குப்பின் தாரமின்னு சொல்லிக்கொடுத்தாயே உன்னைத்தான் மறந்தேனோ? 

**********

2. தாரம்: 

அம்மா போனபிறகு தாய்போல இருந்தாயே உன்னைத்தான் மறந்தேனோ?

கட்டு செட்டாய் குடும்பம் நகர்த்திய உன்னைத்தான் மறந்தேனோ?

நான் வரும் வரை சாப்பிடாம கண்விழித்து கடமை செய்த உன்னைத்தான் மறந்தேனோ?

அது பிடிக்கும் இது பிடிக்கும் என ஆசையாய் பணியாரம் சுட்டுப்போட்ட உன்னைத்தான் மறந்தேனோ?

ஆபிசில் வேறு பெண்தொடர்பு கண்டு பொறுமையாய் போனாயே உன்னைத்தான் மறந்தேனோ?

என் தவறை மனதில் பூட்டி குடும்ப கெளரவம் காத்தாயே உன்னைத்தான் மறந்தேனோ?

ஊதாாித்தனமாய் அடாவடி செலவு செய்த என்னை அன்பாய் திருத்தினாயே உன்னைத்தான் மறந்தேனோ?

உன் உடல் உபாதை பொறுத்து, என் சுகம் பொிதென நினைத்த உன்னைத்தான் மறந்தோனோ?

குடிமகனாய் ஊதாாியாய் திாிந்த எனை திருத்த நினைத்தாயே உன்னைத்தான் மறந்தேனோ?

இருப்பதையெல்லாம் அண்ணன் தம்பிக்கே கொடுத்து இழந்ததை மன்னித்தாயே உன்னைத்தான் மறந்தேனோ?

கூடாநட்பால் வேலை இழந்தும் எனவிட்டு பிாியாதிருந்த உன்னைத்தான் மறந்தேனோ?

எனக்கு மூப்பு வந்தபோதும் மனம் தளராமல் பணிவிடை செய்தாயே உன்னைத்தான் மறந்தேனோ?

வீட்டை விற்று வைத்தியம் பாா்த்து கைவிடாமல் இருக்கிறாயே உன்னைத்தான் மறந்தேனோ? 

அனைத்தும் இழந்தும் அனாதையான என்னை அன்பால் அரவனைத்த உன்னைத்தான் மறந்தேனோ?

நடக்கமுடியாமல் தவித்தபோது தோள் கொடுத்து நின்றாயே உன்னைத்தான் மறந்தேனோ?

எனது ஆயுள் நீட்டிப்புக்கு இறைவனிடம் தாலி போட்டு வேண்டினாயே உன்னைத்தான் மறந்தேனோ ?

மஞ்சக்கயறு மிச்சம் இருந்தாலும் மீட்டிடும் காலம் வருமென காத்திருந்த உன்னைத்தான் மறந்தேனோ? 

படுக்கையில் கிடக்கும் எனக்கு தாயாய், தாரமாய் பணிவிடை செய்து வரும் உனைத்தான் மறவேனோ?

ஆரம்பம் முதலே தன்சுகம் பாராது என் சுகம் பேணிவந்த  உனைத்தான் மறவேனோ?

ஒரே ஒரு வேண்டுகோள்...

எனக்குமுன் எமன் உனை அழைத்தால்  என்னையும் அழைத்து போய்விடு காரணம் நான் அநாதையாகி விடுவேன்! 

கடைசி ஆசை...

அடுத்த பிறவியில் நான் உனக்கு சேவகம் செய்திடும் பாக்கியம் கேட்டிடு!

logo
Kalki Online
kalkionline.com