

அக்கா படித்தது 1970 களில்!
கணிதமே அக்காவின் ஃபேவரிட்!
கணக்கு டியூஷன் தன்னில்தான்
என்னக்காவும் அந்த அக்காவும்
உயிர்த் தோழிகளாய் உறவெடுத்து
பள்ளியிறுதிவரை பாங்காய்ப் பழகிப்பின்னர்
வாழ்க்கையோட்டத்தில் வதிந்தே போனதனால்
பிரியமனமின்றி பிரிந்தே விட்டனராம்!
எனக்கும் அக்காவுக்கும் வயது
இடைவெளி அதிகம் என்பதால்
தோழி அக்காவை நானும்
எப்பொழுதும் எந்திலையிலும் பார்த்ததில்லை!
திருவிழா திருமணம் திகட்டாப்பொங்கலென்று
ஊர்வரும் அக்காவிடம் உனக்கேதும்
வேண்டுமாவென்று வினயமாய்க் கேட்டிட்டால்
‘தோழியைக் கண்டுபிடித்துத்தா!’ என்பார்!
ஃபேஸ்புக் வாட்சப் என்று
இப்பொழுது வளர்ந்திட்ட எல்லாவற்றிலுமே
எவ்வளவு நேரந்தான் தேடினாலும்
இறுதி ரிசல்டென்னவோ ஏமாற்றமே!
பாலமாய் அமைந்திருந்த கணிதாசிரியையை
தேடிப்பிடித்து விபரம் கேட்டால்
அவர்களுக்கும் ஒன்றும் அதிகமாய்த்
தெரியாதென்பதே கிடைத்திட்ட பதில்!
அமெரிக்கா சென்ற அக்கா மீண்டும்
ஊருக்கு வந்து கேட்கும்போது
அந்தக்காவின் அட்ரஸ் தன்னை
கொடுத்துமகிழவே விரும்புது மனசு!
என்ன செய்து இதனைச் சாதிக்க
என்றேதெரிந்தோர் எனக்குக் கொஞ்சம்
ஐடியாகொடுத்தால் அகமிக மகிழ்ந்தே
யாரந்த அக்காவென்று கண்டிடுவேனே!