தொடர்கதை: தீபாவளியின் மறுபக்கம் - அத்தியாயம் 2

தொடர்கதை | Mother and daughter
தொடர்கதை | Mother and daughterImage credit: AI Image
செ.ஹரிஷ்

வணக்கம், என் பெயர் செ.ஹரிஷ். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அ.இராமலிங்கபுரம் என்ற கிராமமே எனது ஊர். சிறுவயதிலிருந்தே எனக்கு எழுத்தார்வம் நன்றாக வந்தன. அதனால் பல கட்டுரைப் போட்டிகளில் கலந்து கொண்டு சில வெற்றிகளையும் பெற்றுள்ளேன். இப்போது எனக்கு வயது 19, கட்டுரையோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல் சிறுகதைகள், கவிதைகள், ஜோக்ஸ் என்று எழுத தொடங்கியுள்ளேன். ஒரு சில சிறுகதை போட்டிகளிலும் கலந்து கொண்டு வெற்றியும் பெற்றுள்ளேன். மேலும் எனது படைப்புகள் கல்கி இணையதளத்தின் மூலம் மக்களிடம் சென்றடைவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றியை கல்கி குழுமத்திற்கு தெரிவித்துக் கொள்கிறேன். எனது எழுத்துப் பணி எளிய மக்களுக்கும் புரியும் வகையில் தொடரும் என்பதை இந்த தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்!

Updated on
MM strip
MM strip

இரவு பெய்த விடாத மழை..!

இருள் மறைந்து காலைப் பொழுது விடிந்தது. செல்வி, மழை நீரால் ஊறிப்போன வீட்டின் தரையை துணியால் துடைத்து எடுத்தார். வீட்டிற்கு வெளியே நச நசவென்று சகதி காடாக இருந்தது. காலை வெயில் சுள்ளென்று பிரகாசமாக அடித்தது. சமையலை முடித்து, சாப்பிட்டுவிட்டு, மகளுக்கும் ஊட்டி விட்டு, பள்ளிக்கூடம் லீவு என்பதால், சத்யாவை தனது அம்மா வீட்டில் விட்டார்.

ஆட்டோ வந்ததும், ஆட்டோவில் ஏறி ஆள்களோடு வேலைக்கு புறப்பட்டார். கம்பெனிக்கு எட்டு கிலோமீட்டர் செல்ல வேண்டும். கம்பெனி வந்ததும் கீழே இறங்கி, உள்ளே நடந்து செல்லும் போது, வலது பக்கத்தில் ஒரு வேப்ப மரத்திற்கு கீழேயுள்ள பிள்ளையார் சிலையை பார்த்து, “அப்பனே விநாயகா நல்லபடியா வேல போகணும்பா” என்று வேண்டிக் கொண்டார்.

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com