சிறுகதை: 'தார்மீக அங்கீகாரம்'

சட்டம் என்பது வெறும் காகிதமல்ல, அது மனிதாபிமானத்தின் வெளிச்சம் என்பதை உணர்த்தும் சிறுகதை
சிறுகதை | a woman with her family
சிறுகதை | a woman with her family AI Image
ஆனந்த் ஸ்ரீனிவாசன்

என் பெயர் ஆனந்த் ஶ்ரீனிவாசன். வயது 75. நான் தபால் இலாகாவில் உயர் அதிகாரியாக பணி புரிந்து 2010இல் ஓய்வு பெற்றவன். ஆறு  வயது முதல் கல்கி வாசகன். 1985முதல் பல்வேறு பத்திரிக்கைகளில் சமூக பிரசனைப்பற்றி  எழுதி உள்ளேன்.  வாரமலர் தினமலரில் T VR நினைவு சிறுகதைப் போட்டியில் மூன்று முறை பரிசு பெற்றுள்ளேன். என் கதைகள் வாரமலர்,குங்குமம், கல்கி மங்கையர்மலர், விகடகவி முதலெழுத்து தினமணி கதிர் போன்ற இதழ்களில் பிரசுரம் ஆகி உள்ளன. இது வரை 75 கதைகள் எழுதி 5கதைத் தொகுப்பு வெளியிட்டு உள்ளேன். 

Updated on
MM strip
MM strip

கன்னியாகுமரி மாவட்டத்தின் அந்தப் பச்சைப் பசேல் என்ற கிராமத்தில், வசித்துவரும் சுமதிக்கு இப்போது இருபத்து நான்கு வயது. ஒரு அரசுப் பணிக்கான ஆணை அவளது கையில் இருந்தது. ஆனால், அந்த மகிழ்ச்சியைக் கொண்டாட முடியாதபடி ஒரு சட்டச் சிக்கல் அவளைப் பிணைத்திருந்தது

அவள் கையில் வைத்திருந்த பிறப்புச் சான்றிதழும், அவளது கல்விச் சான்றிதழ்களும் இரண்டு வெவ்வேறு கதைகளைச் சொன்னது.

சுமதியின் கடந்த காலம் ஒரு கண்ணீர்க் கடல். அவளுக்கு மூன்று வயதாக இருக்கும்போதே தந்தை ஒரு விபத்தில் இறந்துபோனார். தந்தை இறந்த சில காலத்திலேயே, அவளது தாய் அவளைக் கைவிட்டுவிட்டு வேறொருவருடன் சென்றுவிட்டார். ஆதரவற்ற நிலையில் நின்ற அந்தச் சிறுமியை அரவணைத்தது அவளது தந்தையின் சகோதரி மீனாட்சியும், அவரது கணவர் சண்முகமும்தான். அவர்களுக்குக் குழந்தைகள் இல்லை. சுமதியைத் தங்கள் உயிராகக் கருதி வளர்த்தார்கள். பசி அறியாமல் சோறு போட்டார்கள்; தட்டுப்பாடமில்லாமல் கல்வி கொடுத்தார்கள்.

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com