

ஒரு ஆசிரியர் விதைத்த நம்பிக்கை, ஒரு மாணவியை உருவாக்கி, அவள் மூலம் பல வாழ்க்கைகளை மாற்றுகிறது.
இன்று தான் அந்த பள்ளிக்குள் புதிய தமிழ் ஆசிரியையாக வேலையில் சேர்ந்தாள் திவ்யா.
அந்த இடத்தை பார்த்தவுடனே ஒரு கணம் நின்றுவிட்டாள்.
அதே அரசு பள்ளி. அதே பழைய கட்டிடம். சுவர்களுக்கு மட்டும் வயதாகவில்லை — நினைவுகளும் வயதாகி இருந்தன.
அதே பெஞ்சுகள்… அதே ஜன்னல்… அதே கரும்பலகை…
மனசுக்குள் பழைய நினைவுகள் திரும்பி வந்தன.
திவ்யா அந்த வகுப்பறைக்குள் நுழைய, மாணவிகள் அவளை பார்க்க காத்துக் கொண்டு இருந்தனர். ஆச்சரியமாக பார்த்து,
“இவங்கள்தான் புதுசா வந்த தமிழ் டீச்சரா?” என்று பேசிக் கொண்டனர்.
“ஆமா… நான் தான். உங்களுக்கு புதுசா வந்திருக்கிற தமிழ் டீச்சர்,” என்றாள் புன்னகையுடன்.
அது சிறிய பள்ளி என்பதால் அவள்தான் அந்த வகுப்பின் ஆசிரியரும் கூட. எனவே குழந்தைகள் மற்றும் வகுப்பு நிலவரம் குறித்து தெரிந்து கொள்ள,
“இன்னிக்கு நான் உங்களுக்கு கிளாஸ் எடுக்கல… உங்க கூட பேசிப் உங்களைப் பற்றி தெரிஞ்சுக்கறேன். ஒவ்வொருவரா உங்களை நீங்க அறிமுகப்படுத்திக்கோங்க,” என்றாள்.