
கோதைக்கு வியப்பாக இருந்தது, நாட்கள் இவ்வளவு வேகமாக நகர்வதை எண்ணி.
எண்ணிப் பார்க்கிறாள்.
நேற்று தான் வேலையில் சேர்த்த மாதிரியிருக்கு. இன்று பார்த்தால் ரிடையர் ஆகி நான்கு மாதங்கள் ஓடிவிட்டன.
அவள் அப்பா கூறியது நினைவிற்கு வந்தது.
'வாழ்க்கை நாம் நினைக்கும் படி எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்காது. யாருக்காகவும் காத்துக் கொண்டும் இருக்காது. ஓடிக் கொண்டே இருக்கும் வெகு நீண்ட தூர ரயில் போலே. நாம் அதில் ஏறி பயணம் செய்யும் பயணிகள் போல் இந்த உலகில் வந்து ஜாயின் செய்து இறங்கி சென்று விடுகிறோம். எனவே வாழ்க்கையில் கூடிய மட்டும் அதிக ஆசை, பாசம் இவைகளை வைக்காமல் பிரக்டிகலாக மாற்றங்களுக்கு ஏற்ப அட்ஜெஸ்ட் செய்து கொண்டு வாழ்ந்தால் கூடிய மட்டும் நிம்மதியோடு வாழலாம். உன் வாழ்க்கை உன் கையில்.'
அப்பா எப்படிப் பட்ட தீர்க்கதரிசி என்று அப்பாவை நினைத்து வியந்துக் கொண்டிருந்தவளை, காலிங் பெல் சப்த்தம் இந்த உலகிற்கு கொண்டு வந்தது.