
பெரிய கல்யாண மஹால். அதில் அன்று முழுதும் மாபெரும் அன்னதானம்.
ஊரிலே பெரிய தொழிலதிபர் ராமனின் கைங்கர்யம்.
காலை பத்து மணிக்கே கிட்டததட்ட ஆயிரம் பேர் சாப்பிட்டாகி விட்டது.
இன்னமும் வாசலில் பெரிய க்யூ.
“கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க எல்லோருக்கும் சாப்பாடு உண்டு... மூனு வேளையும் சாப்பிடலாம்” ராமன் கனிவுடன் பேச, “ரொம்ப நல்லதுங்க. நீங்க நல்லாயிருக்கனும்” ஒரு முதியவர் வாழ்த்த, “தேங்க்ஸ். சாப்பிட்டு போறப்ப மறக்காம வேட்டி, துண்டு வாங்கிட்டு போ்ங்க.”
“இது வேறயா?” மனம் பூரித்து கேட்டார்.
“ஆமாய்யா.”
“என்ன வேண்டுதல்?”
“எங்கப்பாவின் நினைவாக...” சொல்லும் போதே ராமன் குரல் தேமபியது.
“இறந்துட்டாரா?”
“ஒன்னும் கேட்காதீங்க ப்ளீஸ்“ என்ற ராமனின் ஞாபகக்குதிரை பத்து ஆண்டுகள் பின் நோக்கி ஓடத்தொடங்கியது.