
அய்யா பிச்சை போடுங்கய்யா... ஒரு பிச்சைக்காரன் குரல் கொடுத்தான்.
தாத்தா எதுவும் பேசாமல் அமைதியுடன் அமர்ந்திருந்தார்.
"ஏன் தாத்தா, நீ ஆத்திச்சூடி படிச்சிருக்கியா?" என்றான் நான்காம் வகுப்பு படிக்கும் அவர் பேரன் முகில்.
"ஓ, ஒளவைப்பாட்டி சொன்னது, தெரியுமே," என்றார் தாத்தா.
"ஏன் தாத்தா, அவங்க முதல் ஆத்திச்சூடியே என்ன சொல்லியிருக்காங்க? 'அறம் செய விரும்பு'ன்னு. ஆனா, இந்த பிச்சைக்காரன் தினம் பிச்சை கேட்கிறான். நீங்க கொஞ்சம் கூட இரக்கப்படவும் இல்லை. ஒளவைப்பாட்டி சொன்ன அறம் செய்யவும் இல்லை. இது நியாயமா?" என்றான்.
"தம்பி முகில், எனக்கு என்ன வயசு தெரியுமா?"
"தெரியும் தாத்தா, எழுபதுக்கு மேலேன்னு அம்மாவே சொல்லியிருக்காங்க."
"நான் என்ன வேலை பார்த்தேன்னு தெரியுமா?"
"ஏதோ நகைக்கடையில இருந்ததா சொல்லியிருக்காரு அப்பா."
"சரி, இப்ப எனக்கு வருமானம் என்ன இருக்கும்? அது எங்கே இருந்து வரும்னு சொல்லு பார்க்கலாம்," என்றார் தாத்தா.