

அந்த நகரின் மழைதுளிகள், உயர் நீதிமன்ற வளாகத்தின் மௌனத்தை உறிஞ்சிக் கொண்டிருந்தன.
அந்த உயர் நீதிமன்ற வளாகத்தில் நடந்த ஒவ்வொரு நடவடிக்கையும் தேவியின் எதிர்காலத்தைத் தீர்மானிக்க உள்ள நடவடிக்கையாக இருந்தது.
தேவி பற்றிய முடிவுகள் என்னவாக எடுக்கப்படும் என்கிற கவலையில் சமூக ஆர்வலர் சாந்தி அந்த அறையில் கவலையுடன் உட்கார்ந்திருந்தாள்.
தேவி வீட்டிலிருந்து யாரும் வந்திருக்கவில்லை. தேவி வயது 22. ஆனால் அவள் 21 வார கர்ப்பம்.
தேவி - 'intellect deficit' (முக்கியமாக அறிவுத் திறனில் குறைபாடு – இது ஒரு மன வளர்ச்சி குறைவு அல்லது குறுகிய அறிவாற்றல் நிலை.)
Intellectual functioning குறைவு (படிப்பது, எண்ணுவது, பிரச்சனை தீர்ப்பது போன்றவை மெதுவாக நடப்பது)
Adaptive functioning குறைவு (தினசரி வாழ்க்கைத் திறன்கள் - உடை அணிதல், சமைத்தல், சமூக உறவு, பண நிர்வாகம் போன்றவை சிரமமாக உணர்வது.)
இப்படி உள்ள ஒருவர் 21 வாரம் கர்ப்பம் என்றதும் அதைச் சட்டப்படி கலைக்க அவரது குடும்பம் நீதிமன்றத்தை அணுகியது: