

காலையிலேயே ஆரம்பமாகி விட்டது தாய், மகளின் வாதங்கள்.
“நான் கடைசியா சொல்றேன். நீ மாலதியோட பையன் திவாகரைத் தான் கல்யாணம் பண்ணிக்கணும்” என்றாள் தாய் சுமதி மகள் லதாவிடம்.
“என்னோட கல்யாணத்திற்கு நீ கண்டிஷன் போட வேண்டாம். எனக்கு திவாகரைப் பிடிக்கலை. எனக்கு யாரைப் பிடிக்கிறதோ அவரைத் தான் கல்யாணம் பண்ணிப்பேன்”
“திவாகருக்கு என்ன குறைச்சல். நல்ல படிப்பு. லட்சணமா இருக்கான். சிறிய வயதில் இருந்தே உனக்கு ஃப்ரெண்ட். அவனைக் கல்யாணம் பண்ணிக்கிறதிலே என்ன தயக்கம்?”
“எனக்கு நிறைய ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்க. எல்லோரையும் கல்யாணம் பண்ணிக்க முடியுமா? உன் மனசில என்ன இருக்கு அப்படின்னு ஏன் கேட்க மாட்டேங்கிற?”
“உன்னோட மனசில அம்பானி மகன் இருந்தாலும் நான் கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டேன். மாலதி சின்ன வயசிலேர்ந்து என்னோட ஃப்ரெண்ட். நாங்க ஒரு ஒப்பந்தம் போட்டு இருக்கோம். நமக்குப் பிறக்கிற குழந்தைகளை கல்யாணம் செய்து நிரந்தர உறவா இருக்கணும்னு.”