
மும்பையின் புகழ் பெற்ற வி டி (இன்றைய சி எஸ் டி) ஸ்டேஷனிலிருந்து தானே நோக்கி செல்லும் இருப்பு பாதைகளில் ஒட்டி இருக்கும் ஸ்டேஷன்களில் ஒன்று.
மதியம் சுமார் இரண்டே முக்கால் மணி. அப்பொழுது ஸ்லோ மின்சார ரயில்கள் ஒன்றாம் பிளாட்பாரத்தில் தானே நோக்கியும், இரண்டாவது பிளாட்பாரத்தில் வி டி (சி எஸ் டி) ரயில் நிலையம் நோக்கியும் நகர்ந்துக் கொண்டு இருந்தன.
மூன்றாவது, நான்காவது பிளாட்பாரங்களுக்கான பாஸ்ட் ட்ரெயின்ஸ் இன்னும் வேகம் எடுக்க வில்லை.
பொதுவாக அந்த நேரத்தில் இந்த இரண்டு பிளாட்பரங்களில் மின்சார ரயில்கள் பயணம் செய்யாமல் ஓய்வு எடுத்துக் கொண்டு இருக்கும்.
நீண்ட தூர ரயில் அல்லது கூட்ஸ் வண்டி ஓடும்.
அந்த குறிப்பிட்ட ஸ்டேஷனில் மூன்றாவது பிளாட்பாரத்தில் இந்த கதையின் நாயகி நடந்துக் கொண்டே மொபைல் போனில் பேசிக் கொண்டு இருந்தாள்.