
'அறியாத வயசு இது புரியாத மனசு ரெண்டும் இங்கே..!' என்ற பாடல் வரியில் அலைபேசி ஒலி ஒலிக்கிறது.
போனை எடுத்து, “ம்மா… சொல்லுமா..?”
“அடேய் சக்தி ஒங்க அக்காளுக்கு ஆம்பள புள்ள பொறந்திருக்கு..! சீக்கிரமா கிருஷ்ணா ஆஸ்பத்திரிக்கு வாடா..!”
“இந்த இப்பவே வாரேம்... மா” என்ற உற்சாகத்துடன் படுக்கையை விட்டு எழுந்து, பல்லு கூட விளக்காமல் முகத்தை கழுவி, சட்டையை மாட்டிகொண்டு சக்தி பைக்கில் வேகமாக கிருஷ்ணா ஆஸ்பத்திரிக்கு செல்கிறான்.
குழந்தையை சுற்றியுள்ளவர்கள் முகத்தில் அனைவருக்கும் சந்தோசம். சக்தி குழந்தையின் தலையை தடவி “என் செல்ல மருமகனே..!” என்கிறான்.
இதைக் கேட்டு அம்மாவும் அக்காவும் சிரிக்கிறார்கள்.
ஒரு சில மாதங்களுக்கு பிறகு, குழந்தையின் உடல்நிலை சரியில்லாமல் போகிறது.