

''தேவி… வரப்போற 'மகளிர் தின'த்தை ஒட்டி எங்க டீன் இளம் பெண் மருத்துவர்களுக்கு விருது வழங்கற விழா ஒண்ணு ஏற்பாடு பண்ணியிருக்காரு… அதில ஒரு சிறப்பு என்ன தெரியுமா? இதய அறுவை சிகிச்சை நிபுணரான நான்தான் இந்த வருஷத்தோட பெஸ்ட் பர்ஃபார்மர்ங்கறதாலே என் கையால அவங்களுக்கெல்லாம் விருது கொடுக்க ஏற்பாடு பண்ணியிருக்காங்க. ஐயேம் ஸோ எக்ஸைடட்… விழா சனிக்கிழமைதான்… உனக்கும் கோர்ட் லீவுதானே... என்கூட கண்டிப்பா நீ வரணும்மா'' என்ற தன் கணவன் டாக்டர் கார்த்திக்கிற்கு எப்படி தன் மறுதலிப்பைச் சொல்வது என்று சற்றே தயங்கியவள்…
''கார்த்திக்… தப்பா நினைக்காதீங்க… நாளைக்கு ஒரு முக்கியமான கேஸ் விஷயமா என்னோட NGO-க்குப் போறேன். ப்ளீஸ் எக்ஸ்க்யூஸ் மீ டியர்..'' - கொஞ்சிய மகளிர் சிறப்பு வக்கீல் மனைவி தேவியை அவரால் ஒன்றுமே சொல்ல முடியவில்லை.
''டாட் கவலைப்படாதீங்க… உங்க பொண்டாட்டிக்குப் பதிலா நா உங்கக்கூட வர்றேன்…'' மகள் அபிநயா சொல்ல, கல்லூரியில் படிக்கும் மகளை அணைத்து உச்சி முகர்ந்த கார்த்திக், ''தேங்க்ஸ்டா...'' என்றார்.