
இண்டர்வியூ எல்லாருக்கும் முடிந்த உடனே சிதம்பரம் திவ்யாவிடம்,’என்னை சேம்பரில் வந்து பாருங்க’ என்று சொன்னார். திவ்யாவுக்கு ஒரே குழப்பம். தன்ன எதுக்காக வரச் சொன்னாங்க? என்ற குழப்பம் அவளின் மனதில் இருந்தது.
அன்று காலை 9 மணிக்கே சிதம்பரம் ஆபீஃசுக்கு வந்து விட்டார். அவர்தான் அந்த கம்பெனியினுடைய எம்.டி. அவங்க கம்பெனியில 10 மணிக்கு இண்டர்வியூ. அது ஒரு ஹை ஃப்ரொஃபைல் போஸ்ட். அதனால அவரே கேண்டிடேட்ட செலக்ட் பண்ண முடிவு பண்ணாரு.
கேண்டிடேட்ஸோட ரெசூமெல்லாம் பார்த்தார் சிதம்பரம். அதுல, ’திவ்யா’ன்னு ஒரு பேரு. அவங்க அப்பா பேரு பாஸ்கர். சொந்த ஊர் சென்னை அடையார். அதை பார்த்தவுடனே அவருக்கு அதிர்ச்சி கலந்த சந்தோஷம்.
இண்டர்வியூவில் சி.ஏ. முடித்திருந்த திவ்யா,கேட்ட கேள்விக்கெல்லாம் நன்றாக பதில் சொன்னாள். அவளுடைய மனதில் தன்னம்பிக்கையும் உறுதியும் இருப்பதை அவள் கொடுத்த பதில்கள் வெளிப்படுத்தின.
பிற்பகல் மணி 2 இருக்கும். ஒரு பெரியவர் வந்து சிதம்பரம், எம். டி. என்ற பெயரிட்ட பெயர்ப் பலகை இருந்த அறைக்குள் திவ்யாவை அழைத்துச் சென்றார். நல்ல குளிரூட்டப்பட்ட அறை. அழகான பெரிய எக்சிகியூடிவ் சேரில் சிதம்பரம் அமர்ந்திருந்தார்.