

"கடைசியா என்னடி சொல்றே?" அம்மா சற்று கோபமாகவே கேட்டாள்.
"வேணாம் வேணாம் வேணாம்... எனக்கு கல்யாணமே வேணாம். நான் இப்படியே இருந்து என் வாழ்க்கையை முடிச்சிகிறேன். கையில வேலை இருக்கு. கை நிறைய சம்பளம் இருக்கு. எதாச்சும் விமன் ஹாஸ்டல்ல இருந்து என் காலத்தை முடிச்சிக்கிடறேன்."
"அய்யோ வேண்டான்டி" அம்மா கல்யாணம்.
சாரதா ஒரு வழியாக மூச்சு விடாமல் வசனம் பேசி முடித்தாள்.
சாரதா அழகான பெண். மிகவும் அமைதியானவள். நல்ல படிப்பு. பெரிய கம்பெனியில் உத்யோகம். பெற்றவர்கள் திருமணம் பார்த்த போது அவள் அப்படி வெறுத்தாள். காரணம் சிறுவயதில் இருந்தே அவள் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் நடந்த சண்டையை பார்த்து பார்த்து மனம் நொந்து 'ச்சே இது என்ன திருமண வாழ்க்கை' என்று வெறுப்புற்றாள்.