
புதிதாக வேலைக்குச் சேர்ந்திருக்கும் ரம்யாவை எம்.டி கூப்பிடுவதாகத் தகவல் வந்ததும் சேம்பர் உள்ளே நுழைந்தாள்.
“வாங்க ரம்யா!” எம்.டி. சொன்னார். நீங்க செய்யற புராஜக்ட் எல்லாம் பக்காவா இருக்குன்னு. என் பார்வைக்கும் வந்தது. கங்கிராட்ஸ்.“
“தேங்க்ஸ் சார்”.
“இப்ப நான் கூப்பிட்டது, அடுத்த வாரம் அன்னையர் தினம் வருது. அது சம்பந்தமாக ஒரு முதியோர் இல்லத்துக்குச் சென்று அங்குள்ளவர்களிடம் பேட்டி எடுப்பது மட்டுமல்ல, ஏதாவது அரிதான தகவல் கிடைச்சு, அதைக் கவர் ஸ்டோரியா மாத்த முடியுமா? அங்குள்ளவர்கள் எந்த மன ஓட்டத்தில் இருக்காங்கன்னு பார்த்து வித்தியாசமான ஆர்டிகளா கொடுங்க? ஓகே நீங்க போகலாம்.”
எம்.டி. சேம்பரை விட்டு தன் இருக்கைக்கு வந்தாள். எடிடரிடம் நடந்ததைச் சொல்லவும், வாழ்த்து தெரிவித்தார்.
சென்னையில் உள்ள பதிவு செய்யப்பட்ட முதியோர் இல்லங்கள் லிஸ்ட் தயார் செய்தாள்.
அந்த முதியோர் இல்லத்தின் பெயர் “நேசக்கரம்” என்பதைப் பார்த்ததும் அங்குப் போக முடிவு செய்தாள்.
முன் கூட்டியே அந்த இல்லத்து நிர்வாகியிடம் தகவல்கள் பெற்றுக்கொண்டாள்.
மறுநாள் அந்த முதியோர் இல்லத்தில் உள்ளவர்களுக்குப் பழங்கள் கொடுத்த பிறகு, அவர்கள் தாங்கள் எந்தச் சூழ்நிலையில் இங்கு வர நேர்ந்தது என்பதை விவரித்தார்கள்.