
ஒரு பெண் கை குழந்தையுடன் நீதிமன்றத்தில் நீதிபதி முன்பாக, எதிர் கூண்டில் நிற்கும் வாலிபனை கை நீட்டி, இக்குழந்தைக்கு காரணம் இவர்தான், எனவும் இவருடன் சேர்ந்து வாழ விரும்புவதாகக் கூறி, எங்களை சேர்த்துவையுங்கள் என முறையிடுகிறாள். ஆனால், அந்த வாலிபன் அந்த குழந்தைக்கு நான் காரணமல்ல என மறுத்து வாதாடுகிறான்.
நீதிபதி ஆதாரம் கேட்கிறார். ஆதாரம் இல்லாததால் விசாரணை தள்ளிவைக்கப்படுகிறது.
அடுத்தடுத்த விசாரணையிலும், அந்த குழந்தைக்கு தான் காரணமல்ல என ஒவ்வொருமுறையும் அந்த வாலிபன் மறுத்து வாதாடுகிறான்.
ஆதாரம் இல்லாததால் விசாரணை தள்ளிவைக்கப்படுகிறது.
திருமணம் ஆகாத அந்த பெண், சற்றே கருமையானாலும், கவர்ச்சியான முகம், நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவள். 10 ஆம் வகுப்பு வரை படித்தவள்.
சந்தர்ப்ப சூழ்நிலையால் ஒரு குழந்தைக்கு தாயாகிறாள்.