
வேலூர் அலுவலகத்தில் பணி உயர்வின் காரணமாக பணிமாற்றம். கல்லூரிக்குச்செல்லும் வளர்ந்த குழந்தைகளையும், வங்கியின் முன்னேற்றமே தன் கையில் இருப்பது போல் ஓயாமல் ஓடி ஓடி, தரமான வியாபார வாடிக்கையாளர்களைச் சேர்ப்பதையே வாழ்க்கையாக அமைத்துக்கொண்ட கணவன் கங்காதரனையும், மதுரையில் தனியே விட்டு விட்டு வேலூருக்கு வந்துள்ளாள் காதம்பரி.
நாளைய நாட்களில் கிடைக்கப் போகும் அதிக ஓய்வூதியம் அவள் மனக்கணக்கில், ஓடியதால், வலுவுக்கு விலை கொடுத்து வாங்கிய சங்கடம். ஐம்பது வயதில், ஒரு மகளிர் விடுதியில், சின்னஞ்சிறுசுகளோடு. அறையைப் பகிர்ந்துகொள்வது, ஒரு இடைஞ்சல், இதை அனுபவித்தவர்களுக்கே தெரியும், அந்த தர்மசங்கடத்தின் வலி என்னவென்று. தனி அறை கிடைக்க ௐரிரரு மாதங்கள் ஆகலாம் என்ற தகவல் காதம்பரிக்கு மிக்க சோர்வை அளித்தது.