பல் ஓர் இயற்கை வளம்!

பல் ஓர் இயற்கை வளம்!
Published on

‘பல் போனால் சொல்போச்சு' என்கிறார்கள். சொல்லுக்கு மட்டும்தானா பற்கள் உதவுகின்றன? முகத்தின் அமைப்பு, அழகு புன்முறுவல், உணவை மென்று சாப்பிட என்று பற்களுக்கு பல கடமைகள் இருக்கின்றன. பற்கள் நோயால் பாதிக்கப்பட்டால் பிரச்னைகள் பல.

குழந்தைக்கு பல் முளைப்பது, பால் பற்கள் விழுந்து நிரந்தரப் பற்கள் முளைப்பது, பல்லின் நீளம், அகலம், உயரம் வயதான பிறகு பல் விழுவது எல்லாவற்றையும் மரபணுக்கள் நிர்ணயிக்கின்றன.

கருவுற்ற தாய்க்கு 'கால்சியம், பாஸ்பரஸ், ஃப்ளோரின், விட்டமின் சி,விட்டமின் டி போன்ற நுண்ணூட்டச் சத்துக்கள் குறைந்தால் குழந்தை பிறந்த பிறகு பற்கள் முளைப்பது தாமதமாகலாம். வலு குறைந்த பற்கள் தோன்றலாம். தாய்க்கு தைராய்ட், பாரா தைராய்ட் ஹார்மோன்கள் தொடர்பான நோய்கள் இருந்தாலும் பல்லில் பிரச்னைகள் வரலாம்.கருவுற்ற காலத்தில் தாய் சாப்பிடும் ஒரு சில மாத்திரைகளால் (டெட்ராசைக்ளின்) பற்களின் நிறத்தை மாற்றிவிடும். பல்லின் எனாமல் சரியாக உண்டாகாது.

குழந்தை பிறந்தவுடன் மஞ்சள் காமாலை இருந்தாலும் பல் கடும் பச்சை நிறத்தைப் பெற்றுவிடும்.

சில குழந்தைகளுக்குப் பிறவியிலேயே 1 - 2 பற்கள் இருக்கலாம். கீழ் வரிசையில் நடுவில்தான் சாதாரணமாக இவை இருக்கும். இவை 'நாட்டல் டூத்' என்று அழைக்கப் படுகிறது. பல் மருத்துவரிடம் குழந்தையைக் காண்பித்து இந்தப் பால் பற்களை எடுத்துவிடுவது நல்லது. இந்தப் பல் ஈறுகளுடன் சரியாக ஒட்டாமல் ஆடிக்கொண்டு இருந்தால் உடனடியாக அகற்றிவிட வேண்டும். ஏனெனில் குழந்தை பால் குடிக்கும்போது பல் கழன்று புரையேறி, மூச்சுக் குழாய் அடைபட்டு ஆபத்தில் முடியலாம். திடமாக ஈறுடன் ஒட்டி இருந்தாலும் தாய்ப்பால் குடிக்கும்போது தாயின் மார்பகம் புண்ணாகலாம். தொடர்ந்து பால் கொடுக்க முடியாமல் போகும்.

குழந்தை பிறந்த 6 மாதங்களில் முதல் பல் தோன்ற ஆரம்பிக்கும். சாதாரணமாக கீழ் வரிசை நடுப்பற்கள் முதலில் முளைக்கும். பிறகு மேல் வரிசையில் பற்கள் தோன்றும். ஒரு வயதில் 6. முதல் 10 பற்கள் இருக்கலாம். அதில் கீழ்த் தாடையில் இரண்டு புறமும் ஒரு கடைவாய்ப் பல் இருக்கும். இரண்டு வயதில் 20 பால் பற்களும் முளைத்துவிடும். 6 - 8 வயதில் இவை ஒவ்வொன்றாக விழ ஆரம்பிக்கும். சாதாரணமாக மேல்தாடை நடுப்பற்கள் முதலில் விழும். பல் விழுந்த ஆறு மாதத்தில் முளைக்க ஆரம்பிக்கும். கடைசி கடைவாய்ப் பற்கள் 20 - 22 வயதில் தோன்றும்.

கீழ்த் தாடையில் 16 - மேல் தாடையில் 16 என்று மொத்தம் 32 பற்கள் இருக்க வேண்டும். குழந்தை பிறந்து ஒரு வயதிற்குள் பல் முளைப்பதற்கான அறிகுறி தென்படவில்லை என்றால் தாடை எலும்பினை எக்ஸ்ரே எடுத்து பல்லின் வேர்கள் உருவாகி இருக்கின்றனவா என்று பார்க்க வேண்டும்.

எப்போது பல் தேய்க்க ஆரம்பிக்க வேண்டும்?

ல் தேய்ப்பது இல்லை. பல் துலக்குவது. குழந்தை பிறந்த ஒரு வாரத்தில் ஈறுகளை விரலால் தேய்த்துப் பிடித்துவிட்டு மசாஜ் செய்ய வேண்டும். ஒரு பல் முளைத்த உடன் பல் துலக்க வேண்டும்.

ப்போது பிரஷ் உபயோகிக்க வேண்டும்?

ரண்டு பற்கள் முளைத்தவுடன் டூத் பிரஷ் உபயோகிக்க வேண்டும். ஏனெனில் இரண்டு பற்களுக்கு இடையே சுத்தம் செய்ய பிரஷ் கட்டாயம் தேவை. அதாவது 6-8 மாதம் முதல் பிரஷ் உபயோகிக்கலாம். மிருதுவான பிரஷ் பயன்படுத்த வேண்டும்.

பல் முளைக்கும்போது குழந்தைக்கு வலிக்குமா?

லி இருக்காது. ஆனால் ஏதோ ஒரு வித்தியாசமான உணர்வு ஈறுகளில் தோன்றும்.

பல் முளைக்கும்போது குழந்தை அதிகம் அழுமா?

ழுகை இருக்காது. பல் முளைக்கும்போது வயிற்றுப் போக்கிற்கும் நேரடி தொடர்பு இல்லை. ஈறுகளில் ஏற்படும் வித்தியாசமான உணர்வால் குழந்தை கையில் கிடைத்த பொருளை எல்லாம் கடிக்கும். கடிப்பது குழந்தைக்கு ஒரு புதிய அனுபவம். அதை மீண்டும் மீண்டும் உணர குழந்தை விரும்பும். அடிக்கடி கடிக்கும். கடிக்கும் பொருட்கள் சுத்தமின்றி இருந்தால் கிருமித் தொற்று ஏற்பட்டு வயிற்றுப் போக்கு உண்டாகும்.

குழந்தைக்கு முன் பல் சொத்தையாவதற்கு என்ன காரணம்?

பாட்டில் உபயோகித்து பால், பழ ஜூஸ் குடிக்கும் குழந்தைகளுக்கு முன் பல் சொத்தையாகும் வாய்ப்பு உண்டு. இரவு முழுவதும் ஜீனி கலந்த பானத்தை வாயில் வைத்து இடை இடையே உறிஞ்சிக்கொண்டு தூங்குவதால் முன் பற்கள் பாதிக்கப்படுகின்றன. இது Nursing Bottle caries என்றே அழைக்கப்படுகிறது.

பற்களின் அமைப்பு. வரிசை மாறுவதற்கு என்ன காரணம்?

து ஒரு மரபு வழி காரணம்தான். மேல் வரிசைப் பல் எடுப்பாக இருப்பது கீழ் வரிசைப் பல் உள்ளடங்கி இருப்பது எல்லாம் மரபு வழி அமைப்பு. ஆனால், அதிக நாட்கள் பால் பாட்டில் பயன்படுத்துவது, விரல் சப்புவது அடிக்கடி பல் கடிப்பது, வாயைத் திறந்து வைத்துக் கொண்டு தூங்குவது ஆகியவை. பல், தாடை அமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்தும். இவற்றைத் தடுப்பது நல்லது. பயிற்சி பெற்ற பல் மருத்துவரை அணுகி தகுந்த அறிவுரையும் சிகிச்சையும் பெற்றுக் கொள்வது நல்லது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com