மதுரையின் வேறு பெயர்கள் :-
ஆலவாய், உயர்மதிற்கூடல், கன்னுபரம், கடம்பவனம், கூடற்பதி, பொற்கூடல், நான்மாடக்கூடல், சிவராசதானி, சிவன் முக்தித் தலம், திருவாலவாய், தமிழ்க்கடல், பூலோக கைலாயம், அங்கன்மூதூர், வெள்ளியம்பலம், வழுதிக்கூடல் இவையனைத்தும் தமிழ் இலக்கியத்தில் மதுரைக்கு உள்ள வேறு பெயர்களாகும்.
காஞ்சிபுரத்தின் வேறு பெயர்கள் :-
காச்சிரகம்பம், கச்சி, ஓணகாந்தன், கச்சிமேற்றளி, கச்சிக்காரோணம், கச்சிமயானம், கச்சிக் காமக்கோட்டம், கச்சிக் குமரக்கோட்டம், திருக்கச்சி, அஷ்டபுயகரம், திருத்தண்கா, வேளுக்கை, திருவெக்கா, பாடகம், பரமேஸ்வர விண்ணகரம், ஊரகம், பவள வண்ணம், காரகம், கார்வானம், கள்வனூர், நிலாத்திங்கள்துண்டம், நீரகம் ஆகிய பெயர்கள் கொண்ட தலம் காஞ்சிபுரம்.
திருவாரூரின் வேறு பெயர்கள் :-
கமலாலயபுரம், க்ஷேத்ரவபுரம், ஆடகேசுரபுரம், தேவயாகபுரம், கந்தபுரம், முசுகுந்தபுரம், வன்மீகபுரம், சுசலேகம், பிருதிவிஸ்தலம் ஆகிய பெயர்கள் கொண்ட தலம் திருவாரூர்.
திருவண்ணாமலையின் வேறு பெயர்கள்:
கவுரி நகர், தேகநகர், அண்ணாமலை, அண்ணாநாடு, அண்ணாவூர், அருணாசலம், சிவலோக நகர், வாயு நகர், அறிவு நகர், தூய்மை நகர், தென்கயிலாயம், சோணமலை, அருணகிரி, முக்தி புரி, மோட்ச புரி என இம்மலைக்கு பல பெயர்கள் உண்டு.
பழனி மலையின் வேறு பெயர்கள்:
பழனிக்கு திருஆவினன் குடி, தென்பொதிகை, பொதினி, ஜபமலை, பழனம் என்ற பெயர்களும் உண்டு.
சிதம்பரம் வேறு பெயர்கள்:
நடராஜர் ஆலயத்திற்கு தில்லை வனம், புலியூர், பெரும்பற்றப்புலியூர் , பூலோக கைலாசம், புண்டரீகபுரம், ஞானகாசம், சிதாகாசத்தலம், வியாக்கிரபுரம் முதலிய வேறு பெயர்களும் உண்டு.