வீட்டில் தயாரித்து வைத்த / கடையில் வாங்கிய சீயக்காய் பொடியில் சாதம் வடித்த கஞ்சியை விட்டுக் கலந்து, தேய்த்து அலசினால் போதும் முடி பளபளப்பாக இருக்கும்.
முடி நன்றாக வளர:
பசும்பால், தேங்காய் எண்ணெய் இரண்டும் சம அளவு எடுத்து, அடுப்பில் வைத்துக் காய்ச்சி, வடிகட்டி வைத்துக் கொண்டு தினமும் தலைக்குத் தடவி வந்தால் போதும்.
உடல் அரிப்புக்கு:
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 20 மிளகைப் போட்டு வெடிக்க விடவும். பிறகு ஒரு தம்ளர் தண்ணீர் விட்டு, ஒரு கல் உப்பு போட்டுக் கொதிக்க விடவும். கொதிக்க ஆரம்பித்ததும், அடுப்பை சிம்மில் வைக்கவும். பாதியாக வற்றியவுடன் அடுப்பை அணைத்து விடவும். வடிகட்டிக் குடிக்கவும். இப்படி மூன்று நாட்கள் முதல் ஏழு நாட்கள் வரை குடிப்பதற்குள் அரிப்பு நின்று விடும். அருகம்புல்லை அரைத்துச் சாறு எடுத்தும் குடிக்கலாம்.
கன்னங்கள் மின்ன...
கன்னம் ஒட்டியது போல் இல்லாமல் இருக்க, வாய் நிறையத் தண்ணீர் வைத்துக்கொண்டு, கொப்பளிப்பது போல் வாய்க்குள்ளேயே செய்ய வேண்டும். இப்படிக் குறைந்தது 10-15 நிமிடங்கள் வரை தினமும் செய்து வந்தால், கன்னம் ஒட்டியது போல் இல்லாமல் அழகாக இருக்கும்.
பால் பாத்திரத்தைத் தேய்க்கப் போடுவதற்கு முன்பு, அதில் ஒட்டி இருக்கும் பாலாடையை வழித்து எடுத்து, முகம், கை, கழுத்துப் பகுதிகளில் தடவி, உலர்ந்ததும் அலம்பி விடலாம். இல்லாவிட்டால், குளிக்கப் போவதற்கு முன்பு தடவிக் கொண்டு குளிக்கலாம்.