பொதுவாக காதல் வயப்பட்டவர்களை பார்த்து, 'அவங்க வயசு அப்படி' என்று சொல்வார்கள். உலகின் இயக்கத்துக்கு அடிப்படை ஆகும் காதல் உணர்வுக்கு நமது உடலில் சுரக்கும் ஹார்மோன்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. குறிப்பாக காதல் தாக்கம் இளம் வயதினரிடையே அதிகம் இருக்கும், காரணம் இந்த ஹார்மோன்கள். இதைக் குறித்து இங்கு காண்போம்.
காதல் என்பது உணர்ச்சிகள், நடத்தைகள் மற்றும் உடலியல் இயக்கங்களின் சிக்கலான கலவையாகும். அன்பின் அனுபவத்தில் பல ஹார்மோன்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. முக்கிய ஹார்மோன்கள் மற்றும் விளைவுகள் பட்டியல் இங்கே:
ஆக்ஸிடாஸின் எனும் ஹார்மோன் உடல் தொடுதல், நெருக்கம் மற்றும் சமூக பிணைப்பு நடவடிக்கைகளுக்கு மூலமாகும். இந்த ஹார்மோன் மனங்களை இணைத்து நம்பிக்கை மற்றும் தளர்ச்சி போன்ற உணர்வுகளை ஊக்குவிக்கிறது. ஆக்ஸிடாஸின் சமூக அங்கீகாரம், பிணைப்பு மற்றும் இணைப்பில் ஈடுபடுவதால், பெரும்பாலும் 'காதல் ஹார்மோன்' என்று குறிப்பிடப்படுகிறது.
அடுத்து டோபமைன் எனப்படும் 'இன்ப ஹார்மோன்' செக்ஸ், மகிழ்வான சமூக தொடர்புகள் மற்றும் பரிசுகள் அளித்தல் உள்ளிட்ட மகிழ்ச்சிகரமான நடவடிக்கைகளுக்கு காரணமாகிறது. உடல் மற்றும் மனரீதியான இன்பம் மற்றும் காதல் மீதான ஊக்கத்தை ஒழுங்குபடுத்துகிறது. டோபமைன் அன்பின் இன்பம் மற்றும் பகிர்வு அம்சங்களில் ஈடுபட்டு, 'காதலில்' இருப்பது போன்ற உணர்வுக்கு பெரும் பங்களிக்கிறது.
செரோடோனின் எனப்படும் மனநிலை சீராக்கும் ஹார்மோன்கள் சமூக தொடர்புகள், உணர்ச்சிகள் கட்டுப்பாடு மற்றும் காதல் மனநிலை பண்புகளுக்கு காரணமாக அமைகின்றன. காதல் வயப்பட்டவர்களின் மனநிலை, பசி, தூக்கம் ஆகியவற்றை ஒழுங்குபடுத்தும் செரோடோனின் அன்பின் மீது உணர்வு கட்டுப்பாடு, மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை குறைக்க உதவுகிறது.
வாசோடோசின் ஆதிகால நியூரோஹைபோபிசீல் ஹார்மோனிலிருந்து உருவானது, இது கீழ் முதுகெலும்புகளில் உள்ளது. இது பாலியல் மற்றும் நெருக்கம் உட்பட சமூக அங்கீகாரம் நடவடிக்கைகளுக்கு காரணமாகிறது.
காதலில் மிக முக்கியமான ஹார்மோன் அட்ரினலின் எனப்படும் 'உற்சாக ஹார்மோன்'. இதனால் புதிய உறவுகள் உட்பட மன அழுத்தம் அல்லது உற்சாகமான சூழ்நிலைகளை காணலாம். பாதகமான சூழலில் இதய துடிப்பு மற்றும் ஆற்றலை அதிகரிக்கரித்து சண்டை அல்லது வன்முறைக்கு ஆளாக்கி விடும். குறிப்பாக உறவின் ஆரம்ப கட்டங்களில் காதலில் அதீத உற்சாகம் மற்றும் பதட்டத்தை தருகிறது.
டெஸ்டோஸ்டிரோன் மற்றும் ஈஸ்ட்ரோஜன் 'செக்ஸ் ஹார்மோன்கள்' ஆக செயல்புரிகின்றன. பாலியல் ஆசையைத் தூண்டி நெருக்கம் ஏற்படுத்துதல் மற்றும் இனப்பெருக்க செயல்முறைகளை ஒழுங்குபடுத்துதலுடன் பாலியல் நெருக்கத்தின் உடல் மற்றும் உணர்ச்சி அம்சங்களில் ஈடுபடுகின்றன. இது பிணைப்புகள் மற்றும் இணைப்பை வலுப்படுத்தும்.
இத்தனை ஹார்மோன்களின் ஆதிக்கத்தில் வரும் காதல் மனதளவில் உண்மையானதாக இருந்தால் நல்லதுதான்.