பக்தர்களுக்கு அருளும் மூன்று முக துர்க்கை அம்மன்!

ஆன்மிகத் துணுக்குகள்
பக்தர்களுக்கு அருளும் மூன்று முக துர்க்கை அம்மன்!
Published on

பொதுவாக கோவில்களில் துர்க்கைக்கு ஒரு முகம் தான் இருக்கும். ஆனால் கும்பகோணம் எல்லையில் இருக்கும் அம்மாசத்திரம் சப்தரிஷீஸ்வரர் கோவிலில் மூன்று முக துர்க்கை அம்மன் தரிசனம் தருகிறார்.

சென்னைக்கு அருகில் உள்ள திருமழிசை என்ற திருத்தலத்தில் உள்ள நடராசர் சிலை கமல பீடத்தில் அமைந்துள்ளது. நடராசரின் இடது கண் பார்வையும், அம்பாளின் வலது கண் பார்வையும் ஒன்றையொன்று பார்த்துக் கொள்வது போல் அமைந்துள்ளது விசேஷம்.

திருவெண்காடு புதன் ஸ்தலம். இத்தலத்தின் இறைவன் அகோர மூர்த்தி. அவருக்கு மோகனகீதப்ரியன் என்றும் பெயருண்டு. இங்கு அகோர மூர்த்திக்கு பூஜை செய்யப்படும் போது நாதஸ்வரத்தில் மோகனராகம் மட்டுமே இசைக்கிறார்கள்.

காளஹஸ்தி சிவன் கோவிலில் பெருமாள் கோவில் போல தீர்த்தம் தருகிறார்கள். திருக்கண்ணங்குடி பெருமாள் கோவிலில் வருடத்திற்கு ஒருநாள் மட்டும் விபூதி கொடுக்கிறார்கள். வைணவர்களும் அதை நெற்றியில் பூசிக் கொள்கிறார்கள். இது திருநீரண திருவிழா என்று கொண்டாடப்படுகிறது.

ஞ்சை கோபுரத்தின் கீழ்ச் சுவரில் தட்சிணாமூர்த்தி வெள்ளை தாடியுடன் மரத்தடியில் மான் தோல் மீது காலை மடித்து யோக நிலையில் அமர்ந்துள்ள காட்சியைக் காணலாம்.

ம் ஊர் கோவில்களில் சண்டிகேஸ்வரரின் சந்நிதியில் கை தட்டுவது போல மகாரஷ்டிரத்தில் நந்தி தேவர் சிலை முன்பு மக்கள் கை தட்டி வழிபாடு செய்கின்றனர்.

ராஜஸ்தான் மாநிலம் அரவல்லி பள்ளத்தாக்கில் ஆதிநாதர் ஆலயம் உள்ளது. இந்தியாவின் மிகப் பெரிய ஆலயம் இது. இங்கு 1444 தூண்கள் உள்ளன. காலை சூரிய ஒளி இத்தூண்களில் படும் போது ஒவ்வொரு தூணும் ஒவ்வொரு நிறமாகத் தென்படும் அதிசயம் நிகழ்கிறது.

கீழ்வேளுர் கேடிலியப்பர் கோயிலில் நின்ற கோலத்தில் குபேரன் சன்னதி உள்ளது. நாகப்பட்டினம் மெய்கண்ட வேலவர் கோயிலில் குபேரன் அமர்ந்த கோலத்தில் தனி சந்நிதியில் உள்ளார். காஞ்சி கரவட்ட முடையார் கோவிலில் நுழைவாயிலில் கையில் நிதிகளை ஏந்தி அமர்ந்த நிலையில் குபேரன் காட்சியளிக்கிறார்.

சிவன் மடியில் அம்மன் வீற்றிருக்கும் காட்சியை பல இடங்களில் கண்டிருப்போம். ஆனால் காசியில் அனுமன்காடு எனும் இடத்தில் காமகோடீஸ்வரர் கோவிலில் சிவபெருமான் அம்பாளின் மடியில் சயனித்திருக்கும் அற்புதக் காட்சியைக் காண முடியும்.

திருவொற்றியூர் தியாகேஸ்வரர் கோவிலில் சிம்ம வாகனத்துடன் ஐந்து தலைகளும் ஒரே வரிசையில் கொண்ட பஞ்சமுக விநாயகர் உள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com