தீம் கொலு!

தீம் கொலு!
Published on
nalam tharum Navarathiri
nalam tharum Navarathiri

வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!

Navarathiri
Navarathiri

ந்த வருடம் எனது வீட்டு நவராத்திரி பண்டிகைக்கு தங்க முலாம் பூசிய பெரிய அம்மன் விக்ரகத்தை வாங்கி அதற்கு ஒன்பது நாளும் சிரத்தையுடன் அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை என பூஜை  செய்து மகிழ்வேன்.

- செளமியா நீலகண்டன், சென்னை

முதியோர் பராமரிப்பை கவனத்தில் கொண்டுதான் இந்த வருட நவராத்திரி அமைக்க இருக்கிறேன். நம் பாரம்பரியத்தின் அடையாளச் சின்னமான நவராத்திரியில், நம் பாரம்பரியத்தின் விழுதுகளான முதியோரைப் போற்றும் விதமாக, முதியோர் இல்லங்கள் பெருகாமல் தடுப்பதில் இளைய தலைமுறைகளுக்கு உள்ள பெரும் பங்கை சுட்டிக்காட்டி,  முதியோரின் அறிவுரைகளும், ஆலோசனைகளும் இந்த நவீன வாழ்விற்கும் அவசியம் என்பதை வலியுறுத்தும் வகையில் கொலு அமைக்க உள்ளேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

- பிரகதாம்பாள் விஸ்வநாதன், மண்ணச்சநல்லூர்  திருச்சி

ரு சிறிய கிராமத்தை உருவாக்கி அதில் அலைபேசி தொலைக்காட்சி என்று எதுவுமே இல்லாமல் அந்த காலத்து மக்கள் எல்லோரும் நடமாடுவதுபோலவும் இதுபோல நாமும் இருந்தால் ஆரோக்கியமாகவும் சுகாதாரமாகவும் வாழலாம் என்றும் தீம்  எழுதி வைத்து சிறு சிறு விளக்குகளை போட்டு ஒரு குட்டி கிராமம் அமைக்க திட்டமிட்டுள்ளேன்.

- வெ.  முத்துராமகிருஷ்ணன். மதுரை

இதையும் படியுங்கள்:
நவீன நவராத்திரி!
தீம் கொலு!

ன்று போல பத்து சிறு பொம்மைகளை ஒரே மாதிரி அமைத்து பெண்கள் சுய உதவிக் குழுவாக, அவர்கள் எல்லோரும் விவசாய நிலம் ஒன்றில் நாத்து எடுத்து வேலை செய்து விவசாயத்தை வளர்ப்பது போல ஒரு தீம் செய்யலாம் என்று எண்ணி உள்ளேன். பெண்கள் விவசாயத்தில் ஈடுபட்டால்  நிச்சயம் நாடு சுபிட்சம் ஆகி விவசாயம் வளரும் என்று எண்ணம் தோன்றியதால் இது போல் செய்ய திட்டமிட்டுள்ளேன். 

- லக்ஷ்மி ஹேமமாலினி, சென்னை

குழந்தைகளுக்கு கூட்டு குடும்பம் என்றால் என்னவென்று உணர்த்துவதற்காக பாட்டி - தாத்தா, அப்பா – சித்தப்பா, அத்தை - மாமா என்று எல்லோரும் இருப்பதுபோல ஒரு வீட்டின் பக்கத்தில் அமைத்து எல்லோரும் தோட்டத்தில் அமர்ந்து சாப்பிடுவது போலவும் நிலாவை பார்த்து ரசிப்பது போலவும் ஒரு தீம் அமைத்து கூட்டு குடும்பம் என்று எழுதி வைக்கலாம் என்று யோசனை செய்து வைத்திருக்கிறேன். 

- பிரகதா நவநீதன் மதுரை 

ந்த வருடம் மகளிர் உரிமைத்தொகை பெற்ற அந்த காட்சியினை  பொம்மைகள் மூலம் விளக்கலாம் என்று எண்ணி தயாரித்து வைத்துள்ளேன். சின்ன சின்ன பெண்கள் பொம்மைகளை வைத்து அவர்கள் குடிசையில் இருப்பது போலவும் அவர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைத்து சந்தோஷமாக குடிசை வாசலில் உட்கார்ந்து பேசுவது போலவும் தீம் அமைக்க திட்டமிட்டுள்ளேன்.

- உஷாமுத்துராமன்,  திருநகர்

ட்டையில் சந்திராயன்போல் செய்து பக்கத்தில் சில மனிதர்கள் நிற்பதுபோலவும் எதிர்காலத்தில் நாம் அங்கேயே குடும்பம் நடத்தலாம் என்று பேசுவதுபோலும் ஒரு தீம் அமைத்து சந்திராயன் வெற்றியாக நிலாவில் இருப்பது காண்பிக்கவும் ஒரு தீம் அமைக்க திட்டமிட்டுள்ளேன். 

- நந்தினி கிருஷ்ணன், மதுரை

இதையும் படியுங்கள்:
விரதமும் உணவும்!
தீம் கொலு!

"கோயில் தீம்..." வழக்கமாக வைப்பதுபோல், கொலுப் படிகளில் பொம்மைகளை வைத்துவிட்டு… பிறகு தரையில் மண் பரப்பி அதில் திருப்பதி ஏழுமலையான் கோயில் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் இரண்டையும் வடிவமைக்கலாம் என்று நினைத்துள்ளேன்.

களிமண்ணால் பெரிய மலை ஒன்று செய்து, அதன் நடுவே பாதை அமைத்து பக்தர்கள் நடந்துபோவதுபோல் செய்ய வேண்டும். ஆங்காங்கே சிறுத்தை, புலி போன்ற பொம்மைகளை வைக்கணும். மலை மேல் திருப்பதிப் பெருமாள் அருள்பாலிப்பார். கற்பனைப்படி மேலும் மெரு கூட்டலாம். அது கொலு வைக்கும்போதுதான் விரியும்.

ஆண்டாள் - ரங்கமன்னார் பொம்மையை பெரிய உயரமான கோபுரத்தின் முன்னால் வைத்து, தீர்த்தம், சடாரி, துளசி, கற்பூரம், தீபம் எல்லாம் அருகில் வைக்கணும். இரண்டு வைஷ்ணவர்கள் நமஸ்காரம் செய்வதுபோல் வைத்து.. நாலைஞ்சு நபர்கள் கைகூப்பி சேவிப்பதுபோல் வைக்கணும்..

இதுதான் கோயில் தீம்!

- ஜெயா சம்பத், சென்னை

நாங்கள் வசிக்கும் வீட்டில் மேல்தளம் புதிய போர்ஷன் வீடு கட்டினோம். கொஞ்சம் கொஞ்சமாக பணம் சோ்த்து கட்டிய வீட்டில் இந்த வருடம் முதல் கொலு சிம்பிளாக வைக்க முடிவு செய்துள்ளேன், அதற்காக கனமான அட்டைப்பெட்டிகளை வைத்து மூன்று படிகள் கொலு வைக்க முடிவு செய்துள்ளேன். மூன்று விஷயங்களை ஹைலைட் செய்ய உள்ளேன். மகாத்மா காந்தியின் மூன்று குரங்குகள் பொம்மை மற்றும் புத்தா், காமராஜா் பொம்மைகள் வாங்கியுள்ளேன். 

காந்தியின் முதல் குரங்கு தீயவற்றை பேசாது, இரண்டாவது குரங்கு தீயவற்றை பார்க்காது, மூன்றாவது குரங்கோ தீயவிஷயங்களை காது கொடுத்து கேட்காது. இன்றைய உலகின் போக்கில் இளையதலைமுறைகள் மட்டுமல்ல  அனைவரும் அன்றாடம் கடைபிடிக்க வேண்டிய அற்புதமான விஷயமல்லவா  இது.

அதைத்தொடா்ந்து மனித மனங்கள் இலவச மாயையில் சிக்கி, ஆசைக்கு அடிமையாகிறார்கள். ஆசை நாளடைவில் பேராசையாகி விடுமல்லவா? ஆசையே துண்பத்திற்கு காரணம் என புத்தா் போதனை செய்தார். அதனை உணா்த்தும்விதமாக புத்தா் பொம்மை வைக்கப் போகிறேன்.

உலகில் நோ்மையை தேடவேண்டியுள்ளது. பதவி ஆசையில் அனைவரும் தவறு செய்கிறார்கள். நோ்மைக்கு உதாரணமாய் கா்ம வீரா் காமராசா் தூய்மையான ஆட்சி நடத்தினார். நோ்மை, நீதியை கோடிட்டுக் காட்டும் வகையில் காமராஜா் பொம்மையை வைக்க முடிவு செய்துள்ளேன்.

- ச.சிவசங்கரி சரவணன், செம்பனார்கோவில்

ந்த வருட நவராத்திரிக்கு நாங்கள் எடுத்துக்கொண்ட தீம் 'சிறு தானியம்'. இதன் அடிப்படையில், கொலுவுக்கு முன் நாம் போடும் பாரம்பரியக்கோலத்திற்குப் பக்கத்தில், கம்பு, தினை, வரகு, சோளம், குதிரைவாலி, கேழ்வரகு போன்றவற்றால் போடப்படும்  சிறுதானிய கோலம் ஒன்றும் இடம் பெரும். மாவிலைத் தோரணங்களோடுகூட  இத்தானியக் கதிர்களும் தொங்கவிடப்படும். செட்டியார் செட்டிச்சி கடையில் பைகளில் சிறுதானியங்கள் நிரப்பி விற்பனைக்கு வைக்கப்படும். நெய்வேத்தியத்திற்கும், வருபவர்களுக்கு கொடுக்கவும் சுண்டலோடு  கூடுதலாக சிறுதானிய உணவும் தயாராகும். ஆரோக்கியதிற்கும் பாரம்பரிய மீட்சிக்கும் ஏற்ற தீம்!

- ஜெயகாந்தி மகாதேவன், சென்னை

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com