திடீரென்று ஸ்ட்ரோக் வருமா?

திடீரென்று ஸ்ட்ரோக் வருமா?
Published on

டாக்டர் புவனேஸ்வரி ராஜேந்திரன்

நரம்பியல் நிபுணர்

இன்று, அக்டோபர் 29ம் தேதி  ‘உலக ஸ்ட்ரோக் தின’ மாக (International Stroke Day) அனுசரிக்கப்படுகிறது. எனவே ஸ்ட்ரோக் பற்றி இன்று சில தகவல்களைத் தெரிந்து கொள்ளலாமா என்று கேட்டார் நரம்பியல் நிபுணர் டாக்டர் புவனேஸ்வரி ராஜேந்திரன்.

“யாருக்காவது ஸ்ட்ரோக் என்றால் உடனே பயந்து விடுகிறோமே  டாக்டர்… அதான்... அதைப் பற்றி தெளிவாகத் தெரிந்துகொண்டால் முன்னெச்சரிக்கை யோடு இருக்கலாம் அல்லவா?”

புன்னகையோடு அவர் ஆரம்பித்த விதமே நம்பிக்கை யூட்டுவதாக இருந்தது.

டாக்டர்புவனேஸ்வரி ராஜேந்திரன்
டாக்டர்புவனேஸ்வரி ராஜேந்திரன்

ஸ்ட்ரோக்

பொதுவாக ஸ்ட்ரோக் என்பதை பக்கவாதம் அல்லது இதயத்தில் ஏற்படும் அடைப்பு என்றுதான் குறிப்பிடு கிறோம்.

மூளையில் திடீரென ஏற்படும் தாக்குதல் அல்லது பாதிப்பு என்பது, மூளையின் ஒரு பகுதியில் ஏற்படும் ரத்தக் கசிவினாலோ, அல்லது மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாய் திடீரென்று அடைபடுவதாலோ ஏற்படுவது.

மூளைக்கு ரத்தம் சரியாகச் செல்லாமல் இருந்தால் அதற்குத் தேவையான ஆக்ஸிஜன் கிடைக்காமல் மூளையின் செல்கள் இறக்க நேரிடும்.

இதை அவசர நிலையாகக் கருதி, உடனே மருத்துவ மனையை அணுக வேண்டும். நாலரை மணி நேரத்துக்குள் தரப்படும் சிகிச்சையால் குணப்படுத்த முடியும்.

ஸ்ட்ரோக் வரும் போது என்ன அறிகுறிகள்  தோன்றும்?

முகம், கை கால்களில் குறிப்பாக உடலின் ஒரே பக்கத்தில் திடீரன ஒரு தொய்வு, அதிகமான தலைவலி, சில நேரம் வலியோடு வாந்தி, மயக்கம் வருதல், பார்வை மங்குவது, பேச்சு குளறுவது, மற்றவர் பேச்சைப் புரிந்துகொள்ளாமல் போதல், உடலில் தள்ளாட்டம் உண்டாகி, நடப்பதில் சிரமம்... இவையெல்லாம் திடீரென்று ஏற்படலாம். இவைதான் முக்கிய அறிகுறிகள்.

இதில் பிரிவுகள் இருக்கிறதா டாக்டர்?

ஸ்கிமிக் (Ischemic strokes),  ஹெமராஜிக் (Hemorrhagic strokes) என்று இரண்டு வகைப்படுத்தலாம். மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டு அதனால் ஸ்ட்ரோக் வருவதை இஸ்கிமிக் என்கிறோம். மூளையில் ரத்தக் குழாய் வெடிப்பு ஏற்பட்டு ரத்தக் கசிவு வருவதால் உண்டாகும் ஸ்ட்ரோக் ஹெமராஜிக்.

இஸ்கிமிக் ஸ்ட்ரோக் என்ன மாதிரியான பாதிப்பை உண்டாக்கும் ?

னேகமாக 85 சதவீதம் பேருக்கு இஸ்கிமிக் வகை ஸ்ட்ரோக் வருகிறது. இதிலும் சாதாரண பாதிப்பு மற்றும் பெரிய பாதிப்பு என்று இரண்டு விதங்கள் வரலாம். இரண்டுக்குமே உடனே சிகிச்சை தேவைப்படும்.

ட்ரான்ஸியன்ட் அட்டாக்   

மூளைக்குச் செல்லும் சிறிய ரத்தக் குழாயில் அடைப்பு  ஏற்பட்டால்,  தாக்குதலுக்கான திடீர்  அறிகுறிகள் இருந்தாலும், சில நிமிடங்கள் முதல் சில மணி நேரம் மட்டுமே வந்து விட்டு, உடலில் நிரந்தரமான சேதம் எதுவும் ஏற்படுத்தாமல் குணமாகிவிடும்.

இதை மினி ஸ்ட்ரோக் என்றும்,   ட்ரான்ஸியன்ட் அட்டாக் Transient ischemic attack (TIA) என்றும் குறிப்பிடுகிறோம்.

மற்றொன்று, மூளையின் பெரிய ரத்தக்குழாயில் ஏற்படும் அடைப்பு இதுவும் இஸ்கிமிக் வகைதான்.

ஸ்ட்ரோக் வந்தால் உடனே கவனித்து சிகிச்சை அளிக்க வில்லை என்றால் நிரந்தரமான பாதிப்பை ஏற்படுத்தலாம். எனவே,  அறிகுறிகள் வந்த உடன் நாலரை மணி நேரத்துக்குள் அடைப்பை நீக்க வேண்டும் 

உடனே மருத்துவமனைக்கு செல்லுவதால்,  அறிகுறி களைக் கொண்டு,  அதன் தன்மை எத்தகையது, எவ்வித சிகிச்சை அளிக்க வேண்டும் என்று மருத்துவர்களால் எளிதில் கண்டுபிடிக்க இயலும்.

BEFAST என்ற வார்த்தை குறிப்பிடப்படுகிறதே டாக்டர்?

B- Balance

E- Eyes

F- Face

A- Arms and leg

S- Speech

T- Time

உடல் பேலன்ஸ், கண்கள், முகம், கைகள், பேச்சு, டைம் இவற்றைக் குறிக்கும் ஆங்கில வார்த்தைகளின் முதல் எழுத்தைச் சேர்த்து உருவானது BEFAST. அறிகுறிகள் மற்றும் சரியான நேரத்தில் எடுக்க வேண்டிய சிகிச்சை இவற்றைக் குறிப்பிடுவதுதான்  BEFAST 

சிகிச்சைகளில்  “t-PA” என்று குறிப்பிட்டீர்களே அது என்ன?

ஸ்கிமிக் ஸ்ட்ரோக் வந்தவர்களுக்கு,  அடைப்பால் ரத்த ஓட்டம் தடைப்படும்போது அடைப்பை நீக்குவதற்காக உடனே செய்ய வேண்டிய  சிகிச்சை இது. (Tissue plasminogen activator)  பாதிக்கப்பட்டவர்களுக்கு இது பொருத்தமாக இருக்குமா என்பதை முற்றிலும் சோதித்த பின்னரே இச்சிகிச்சை தரப்படும்.

இஸ்கிமிக் ஸ்ட்ரோக் வந்தவர்களுக்கு,  ஸ்ட்ரோக் வந்த நாலரை மணி நேரத்திற்குள், இந்த அடைப்பை நீக்க வேண்டும். அது மிக அவசியம். தேவைப்பட்டால்,  சிலருக்கு, ஆஞ்சியோ செய்வதுபோல மெகானிகல் த்ராம்பெக்டமி (mechanical thrombectomy) மூலம், ரத்த ஓட்டத்தைத் தடுக்கும்  கட்டி அகற்றப்படும். இதையும்  ஸ்ட்ரோக் வந்த 6 முதல்  10 மணி நேரத்திற்குள் செய்ய வேண்டும்.

என்ன சோதனைகள் செய்யப்படுகின்றன?

ன்ன மாதிரியான ஸ்ட்ரோக் என்பதை பல சோதனைகள் மூலம் கண்டறிகிறோம்.  மூளையை  சிடி ஸ்கேன், எம் ஆர் ஐ ஸ்கேன் செய்யும்போது ரத்தக் கசிவு அல்லது ரத்தக் குழாய் அடைப்பா என்று தெரியும். வழக்கமான சுகர், ஈசி ஜி , ரத்த அழுத்தம் இவையும் சோதிக்கப்படும்.

என்ன மாதிரியான சிகிச்சை தரப்படுகிறது?

மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தைச் சரியாக்குவதும்,  அதிக பகுதிகள் பாதிப்புக்குள்ளாவதைத் தடுப்பதும், மூளை செல்களின் இறப்பைத் தடுப்பதும், சிகிச்சையின் முக்கிய நோக்கம்.

கட்டி மூலம் ரத்தக் குழாய் அடைப்பு ஏற்படுவதை இன்ஃப்ராக்ஷன் (infraction) என்கிறோம். அடைப்பை நீக்கி, மூளைக்குச்  செல்லும் ரத்த ஓட்டத்தை சரியாக்குவது முதல் சிகிச்சை. ரத்தக்கசிவால் (haemorrhage) ஏற்படும் ஸ்ட்ரோக், அதிக ரத்த அழுத்தத்தால் உண்டாவதால், முதலில் பிபியை கட்டுப் படுத்துகிறோம். மூளையில் ஏற்பட்டிருக்கும் வீக்கத்தைக் குறைக்கவும்  சிகிச்சை தரப்படுகிறது.

ஸ்ட்ரோக் வராமல் தடுக்க முடியுமா?

ஹைபர்டென்ஷன், சர்க்கரை, அரித்மியா எனப்படும் ஒழுங்கற்ற  இதயத் துடிப்பு,  சிக்கிள் செல் டிஸீஸ் எனப்படும் ரத்த ஹீமோக்ளோபின் பிரச்னை, மன அழுத்தம், அதிக எடை மற்றும் கொழுப்பு  போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஸ்ட்ரோக் வரும் வாய்ப்பு அதிகம்.

சரியான உணவுப் பழக்கம், தூக்கம், உடற்பயிற்சி, ரத்த அழுத்தம் சர்க்கரை போன்றவற்றைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருத்தல் போன்றவற்றால் ஓரளவு தடுக்கலாம்.

எதுவானாலும் உடனே சிகிச்சை பெற்றால் பெரும் பாதிப்பு வராமல் தவிர்க்க முடியும் என்பதை மனதில் கொள்ளுவது அவசியம்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com