சுற்றுலா செல்லும்போது அவசியம் கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

சுற்றுலா செல்லும்போது அவசியம் கவனிக்க வேண்டிய விஷயங்கள்!
Published on

சுற்றுலா பயணம் என்பது உடலுக்கும் உள்ளத்துக்கும் ஒரு மாற்றம் தந்து உற்சாகப்படுத்துவது தான். சுற்றுலாவோ ஆன்மீக பயணமோ அந்த செலவுக்கான பணத்தை சேமித்து வைத்திருக்க வேண்டும்.

பயணச்சீட்டுகளை முதலில் முன்பதிவு செய்து விட வேண்டும்.

எடுத்துச் செல்ல வேண்டிய பொருட்கள் மற்றும் போகும் இடங்களில் இருந்து கொண்டு வர வேண்டிய பொருட்கள் ஆகியவற்றின் பட்டியலை தயார் செய்து வைத்துக் கொண்டால் எதையும் மறக்காமல் இருக்க உதவும் ‌.

பார்க்க வேண்டிய இடங்கள் தங்கும் இடங்களில் தகவல்களையும் முன்கூட்டியே சேகரிக்க வேண்டும்.

தேவைப்படும் துணிமணிகள் சோப்பு, பவுடர், எண்ணெய் சேர்த்து பல் தேய்க்கும் பிரஷ் போன்றவற்றை எடுத்துச் சென்றால் போகும் இடத்தில் தேடி அலைய வேண்டியிருக்காது.

அடையாள அட்டைகள், ஆதார் கார்டுகள், பணம், ஏடிஎம் கார்டு இவற்றை ஞாபகமாக எடுத்துச் செல்ல வேண்டும்.

விலை உயர்ந்த நகைகளை அணிவதை தவிர்த்து அளவான எளிமையான நகைகள் அணிந்தால் பாதுகாப்பு. அதேபோல வீட்டில் உள்ள தங்கம், வெள்ளி நகைகளை பத்திரப்படுத்திவிட்டு செல்வது நிம்மதி தரும்.

பயணத்தின் போது சாப்பிடுவதற்கு வீட்டிலேயே முடிந்த அளவு உணவு தயாரித்துக் கொண்டு போனால் சுகாதாரமாகவும் இருக்கும். செலவும் குறையும்.

பயணம் செய்வது உடல்நிலைக்கு ஏற்ற மருந்து, மாத்திரைகள் மற்றும் பொதுவான தலைவலி, காய்ச்சல்களுக்கான மருந்துகளையும் மறக்காமல் எடுத்துச் செல்வது நலம்.

பழைய செய்தித்தாள்கள், உணவு சாப்பிட தேவையான பாக்கு மட்டை தட்டுகள், தமிழர்கள், தம்ளர்கள், பிளாஸ்க் ஆகியவற்றை எடுத்துச் செல்ல வேண்டும்

பயணத்தை மகிழ்ச்சியாக அனுபவிக்க வேண்டுமானால், குடும்ப சச்சரவுகள் மற்றும் எல்லாவித பிரச்சினைகளையும் மறந்து மன நிம்மதியுடன் சுற்றுலா செல்ல வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com