தோட்டம் - துரவு...

தோட்டம் - துரவு...
Published on

ம் பேச்சு வழக்கில் உள்ள சில இரட்டைச் சொற்கள் வெறும் எதுகை மோனைக்காக சொல்லப் பட்டது அல்ல. அச்சொற்களுக்கு அர்த்தம் உள்ளது. சிலவற்றைக் காண்போமா...

1.குண்டக்க - மண்டக்க

குண்டக்க - இடுப்புப் பகுதி

மண்டக்க - தலைப் பகுதி

2. அக்குவேர் - ஆணிவேர்

அக்குவேர் : செடியின் கீழ் உள்ள மெல்லிய வேர்...

ஆணி வேர்: செடியின் கீழ் ஆழமாக செல்லும் வேர்...

3.இடக்கு - முடக்கு

இடக்கு : கேலியாக நகைத்து, இகழ்ந்து பேசுதல்...

முடக்கு : கடுமையாக எதிர்த்து பேசுதல்...

4. தோட்டம் - துரவு

தோட்டம் : செடி, கொடி, கீரை பயிரிடப்படும் இடம்...

துரவு: கிணறு...

5.சத்திரம் - சாவடி.

சத்திரம் : இலவசமாக சோறு போடும் இடம் ( விடுதி )

சாவடி: இலவசமாக தங்கும் இடம்...

6. கடை - கண்ணி.

கடை: தனித் தனியாக உள்ள வியாபார நிலையம்...

கண்ணி: தொடர்ச்சியாக அமைந்த கடைகள் , கடை வீதிகள்...

7.நேரம் - காலம்

நேரம்: ஒரு செயலைச் செய்வதற்கு நமக்கு வசதியாக அமைத்து கொள்வது.

காலம் : ஒரு செயலை செய்வதற்கு பஞ்சாங்க அடிப்படையில் செய்ய முற்படும் கால அளவு.

8.நகை - நட்டு

நகை : பெரிய அணிகலன்கள் (அட்டிகை, ஒட்டியானம்.)

நட்டு : சிறிய அணிகலன்கள் (தோடு, மோதிரம்..)

9. பொய்யும் - புரட்டும்

பொய்: உண்மையில்லாததை கூறுவது...

புரட்டு : ஒன்றை நேருக்கு மாறாக மாற்றி பொய்யை உண்மையென கூறி நடிப்பது...

10. ஏழை - பாழை

ஏழை : பிறவியில் இருந்தே ஏழையாக இருப்பவர்.

பாழை: பணக்காரராக இருந்து ஏழையானவர். (வாழ்ந்து கெட்டவர்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com