டிப்ஸ் ஓ டிப்ஸ்!

டிப்ஸ்
டிப்ஸ்
 • வீட்டு உபகரணங்கள் வாங்கும்போது கேரண்டி கார்டு, சர்வீஸ் கார்டு, விளக்கக் கையேடு என எல்லாவற்றையும் கேட்டு வாங்குங்கள். இவற்றை தனி ஃபைல் போட்டு பத்திரப் படுத்தினால், பின்னால் அவற்றில் ஏதேனும் பிரச்சனை இருந்தாலும் இவை கைகொடுக்கும்.

 •  தங்க நகை, பட்டுப்புடைவை போன்ற விலையுயர்ந்த பொருள்களை வாங்குகிறீர்களா? நான்கைந்து கடைகளில் ஏறி இறங்கி, தரம், டிஸைன், விலை எல்லாவற்றையும் ஒப்பிட்டுப் பார்த்து வாங்குங்க. முதல்நாள் தேர்வு, அடுத்தநாள் பர்சேஸ் என்றுகூட இரண்டு கட்டமாகப் பிரித்து ஷாப்பிங் செய்யலாம்.

 •  முதலில் வாங்க வேண்டிய பொருள்களின் பெயர்களைப் பட்டியலிட்டுக் கொள்ளுங்கள். பிறகு, கடைகள் அமைந்துள்ள இடத்தைப் பொருத்து வரிசையாக பொருள்களை வாங்கினால் வீண் அலைச்சலைத் தவிர்க்கலாம்.

 •  ஷாப்பிங் செய்வதற்கு, பிஸியான நாள்கள் சனி, ஞாயிறைத் தவிர, ஏனைய வேலை நாட்களைத் தேர்ந்தெடுங்கள். அப்போதுதான் நெரிசலில் சிக்காமல் தேவையானவற்றை கவனத்துடன் ஷாப்பிங் செய்ய முடியும்.

 • எந்த இடத்திற்கு ஷாப்பிங் செல்வதாக இருந்தாலும் காலை வேளையில் செல்வது உகந்ததாக இருக்கும். அப்போதுதான் தேவையானவற்றை பொறுமையாக பார்த்து வாங்குவதோடு முழுமையாக ஷாப்பிங் செய்த திருப்தியும் இருக்கும்.

 •  முதலில் வாங்க வேண்டிய பொருள்களின் பெயர்களைப் பட்டியலிட்டுக் கொள்ளுங்கள். பிறகு, கடைகள் அமைந்துள்ள இடத்தைப் பொருத்து வரிசையாக பொருள்களை வாங்கினால் வீண் அலைச்சலைத் தவிர்க்கலாம்.

 • ஷாப்பிங் செய்த நகைகளையோ, புடைவைகளையோ உறவினருக்கோ நண்பிகளுக்கோ காட்டும்போது, மாறுபட்ட கருத்துகள், விமர்சனங்கள் வரலாம். உங்கப் பணம், உங்க டேஸ்ட்!  மற்றவங்க பேச்சைக் கேட்டு மனம் சுண்டிப் போகாதீங்க.

 • ஜவுளிக் கடைகளில் வாங்கும்போதே, எக்சேஞ்ச் வசதி உண்டா எந்தத் தேதிக்குள்  எக்சேஞ்ச் செய்துகொள்ளலாம் என்று தெளிவாகக் கேட்டுக் கொள்ளவும். கடைகளில் ரெடிமேடு ஆடைகளை எக்காரணம் கொண்டும் மாற்றுவதில்லை.

 • ஷாப்பிங் செய்து முடித்ததும், கோயில், ஹோட்டலுக்குப் போவது கூட்டம் மிகுந்த ரயில், பஸ்களில் பயணிப்பது போன்றவற்றைத் தவிர்க்கவும். ஆட்டோவிலோ கால் டாக்ஸியிலோ ஏற நேர்ந்தால், வண்டி பதிவு எண்ணைக் குறித்துக் கொள்ள மறக்காதீர்கள்.

 • கை நிறைய சிறு சிறு பைகளை வைத்துக்கொண்டு அலைவதைவிட, வாங்கும் அனைத்து பொருள்களையும், ஒரே ஒரு பெரிய பையில் போட்டுக்கொள்வது பாதுகாப்பானது. எதுவும் தொலைந்து போகாமலிருக்கும்.

 • ஷாப்பிங் செய்யும்போது, முன்பின் அறியாத நபர்களிடம் பேச்சு தர வேண்டாம். “நானா? தி.நகருக்குப் போய்க்கிட்டிருக்கேன். ஒரு நெக்லஸ் வாங்கணும்னு ரொம்ப நாளா ஆசை...” இதுபோன்ற செல்பொன் பேச்சுக்களைக்கூட தவிர்த்துவிடவும்.

 • ஷாப்பிங் செல்லும்போது தேவையான பொருள்களின் லிஸ்ட்டுடன் கடைக்குச் சென்று அவற்றை மட்டுமே வாங்கிக்கொண்டு கண்ணைக் கட்டிய குதிரை மாதிரி வந்துவிட்டால் பணம், நேரம் இரண்டும் மிச்சமாகும்.

 • பெண்கள் தனியாக ஷாப்பிங் செல்ல வேண்டாம். உடன் நம்பகமான தோழியையோ, ரசனையுள்ள உறவினரையோ உதவிக்கு அழைத்துச் செல்வது உசிதம். இதனால் பொருள்களைத் தேர்வு செய்யும்போது குழப்பம் இருக்காது. அதேநேரம் பாதுகாப்பாகவும் இருக்கும்.

 • ஷாப்பிங் போகும்போது ரொக்கமாகக் கொண்டு செல்வதைவிட, கிரெடிட் கார்டுகளின் மூலம் பணத்தைச் செலுத்துவதே பாதுகாப்பானது. அவசர உதவிக்கு என ஒரு சில நூறு ரூபாய்களை மட்டுமே கையிருப்பில் வைத்திருக்கவும்.

 • வரி செலுத்தக்கூடிய எந்தப் பொருள்களை வாங்கினாலும் உடனே அந்தப் பொருளுக்குரிய விற்பனை வரியைக் கட்டி, ரசீதையும் வாங்கிப் பத்திரப்படுத்துங்கள். பல விஷயங்களில் இது நன்மை பயக்கும்.

 • வெளியே செல்லும்போது குழந்தைகளுக்குத் தேவையானதை நாமே வாங்கி வருவதுதான் நல்லது. அவர்களை அழைத்துச் செல்வது தேவையில்லா தர்மசங்கடத்தை ஏற்படுத்தும்.

2009 செப்டம்பர் மாதம் மங்கையர்மலர் இதழில் வெளிவந்த ஷாப்பிங் டிப்ஸ் பகுதியிலிருந்து...

80 வருட பாரம்பரிய கல்கி குழும இதழ்களைக் 'களஞ்சியம்' பகுதியில் படித்து மகிழலாம்! https://kalkionline.com/subscription

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com