திசுக்களையும் தானம் செய்யலாம். தான சதவிகிதம் அதிகரிப்பு!

மும்பை பரபர
திசுக்களையும் தானம் செய்யலாம்.
தான சதவிகிதம் அதிகரிப்பு!

மும்பை மாநகரில் சென்ற இரு ஆண்டுகளை விட இந்த ஆண்டு உடல்தானம் வழங்கப்படுவது சுமார் 44 சதவிகிதமாக அதிகரித்துள்ளது என சுகாதாரத் துறை பதிவுகள் தெரிவிக்கின்றன.

மண்டல மாற்று அறுவை சிகிச்சை ஒருங்கிணைப்புக் குழுவின் தலைமைச் செயலர் டாக்டர் பரத்ஷா பகிர்ந்த விபரம் பின்வருமாறு:-

உடல் உறுப்புத்தானம் குறித்து அதிக விழிப்புணர்வை ஏற்படுத்தவும், இளைய சமுதாயத்தில் இத்தகைய தானத்தை வழங்குபவர்களைக் கண்டறியவும் திட்ட மிடப்பட்டு உள்ளது. தானமாக கிடைக்கும் சீனியர் சிட்டிசன்களின் உடலுறுப்புக்களில் அநேகம் மாற்று அறுவை சிகிச்சை செய்ய தகுதியற்றதாக இருக்கிறது.

சென்ற வருடம் மூளைச்சாவு ஏற்பட்ட வயதானவர் ஒருவரின் குடும்பம், அவரது உடலைத் தானம் செய்தது. ஆனால், அவரது சிறுநீரகம் மட்டுமே மாற்று அறுவைச் சிகிச்சைக்காகப் பயன்பட்டது.

கொரோனா காலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட நெறிமுறைகள் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த உடல்தானம் இப்போது இயல்பு நிலைக்குத் திரும்பி யிருக்கிறது.

தீவிர சிகச்சை மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர்கள் கொண்ட துணைக் குழுக்களை, மண்டல மாற்று அறுவை சிகிச்சை ஒருங்கிணைப்புக் குழு உருவாக்கியுள்ளது. மாதந்தோறும் இவர்கள் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, சமீபத்தில் நானாவதி மருத்துவமனையில் எலும்பு தானம் செய்யப்பட்டது. எறும்பு மற்றும் திசு - எலும்புக் குறைபாடு உடைய நோயாளிகளுக்குச் சிகிச்சையளிக்கப் பயன்படுகின்றன.

மருத்துவ அதிகாரிகளும், இறந்தவர்களின் குடும்பம் மற்றும் உறவினர்களுடன் இத்தகைய தானம் பற்றிப் பேசுகின்றனர்.

விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் காரணமாக, இப்போதெல்லாம் சிறுநீரகம், கணையம்; கல்லீரல் போன்றவைகளுடன் கைகளும் தானமாக வழங்கப் படுகின்றன.

சிறுநீரகம் மற்றும் கல்லீரல் தேவைகள் அதிகமாகவே இருக்கின்றன.

தோல், எலும்பு தசைகளுடனடங்கிய திசுக்களையும் தானம் செய்யலாமென்கிற விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியில் கவனம் செலுத்தப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com