காஸ் மிச்சப்படுத்த... - சில யோசனைகள்!

காஸ் மிச்சப்படுத்த...
- சில யோசனைகள்!
Published on

காஸ் சேமிப்பைக் குறித்து அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய நேரம் இது. நான் முதல்முதலில் காஸ் அடுப்பும் சிலிண்டரும் வாங்கியபோது சிலிண்டரை வீட்டுக்குக் கொண்டு வரும் ஆள் சொன்னார்:

"எப்பொழுது காஸ் அடுப்பை அணைப்பதானாலும் முதலில் சிலிண்டரை மூடிவிட்டு மேலே அணையுங்கள். ஒவ்வொரு தடவையும் டியூபில் இருக்கும் காஸ் வீணாகாமல் இருக்கும். காஸும் ஒரு வாரம் அதிகமாக வரும்." எனக்குத் தெரிந்த எல்லோரையும் விட நிச்சயமாக எனக்குக் காஸ் அதிக நாட்கள் வருகிறது.

மேலும், காஸ் எரியவில்லை என்று காஸ் வரும் நிப்பிளைக் குத்திக் குத்திப் பெரிது செய்து அடுப்பு சிவப்பாக எரிவதாலும் காஸ் வீணாகும்.

குக்கர் சத்தம் வந்ததும், பால் பொங்க ஆரம்பித்ததும், கடைசி தோசையோ, சப்பாத்தியோ திருப்பிப் போட்டதும் சிலிண்டரை அணைத்து விட்டால், ட்யூபில் இருக்கும் காஸ் எரியவும் சரியாக இருக்கும்.

ஒரு பொருள் வேகும்போதே அடுத்தது அடுத்ததை அடுப்பில் வைக்கத் தயார் நிலையில் இருக்க வேண்டும். ஒரு கையால் அடுப்பிலிருப்பதை இறக்கும்போதே மற்றதை மற்றொரு கையால் வைக்க வேண்டும். இரண்டு கையும் தேவையானால் முதலில் அடுப்பை சிம் செய்துவிட்டு இறக்க வேண்டும். மற்றதை வைத்த பின் பெரிது செய்துகொள்ளலாம். கொதி வந்ததும் சிம் செய்து தட்டைப் போட்டு மூடினால் சீக்கிரம் வேகும்.

காஸ் எப்பொழுதும் நீலமாகத்தான் எரிய வேண்டும்.

புதிய சிலிண்டர் வந்ததும் இந்த முறைகளைப் பயன்படுத்தி எவ்வளவு நாட்கள் காஸ் அதிகம் வந்தது என்று பாருங்கள். நீங்களே ஆச்சர்யப்படுவீங்க...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com