
மங்கையர் மலர் இதழில், 2015 ஆம் ஆண்டு, 'உன்னதம் தரும் யோகா’ என்ற தலைப்பில் கட்டுரைகள் தொடர்ந்து வெளிவந்தன. அத்தொடரிலிருந்து சில பகுதிகள் இங்கே இத்தொடரில்...
தொடரின் அனைத்துப் பகுதிகளையும், மேலும் பல சுவாரஸ்யமான கதை, கட்டுரைகளையும் கல்கி களஞ்சியத்தில் சந்தா செலுத்திப் படிக்கலாம்.
சந்தா செலுத்த...
முன் தயாரிப்பு யோகப் பயிற்சி:
எந்த ஒரு உடற்பயிற்சிக்கும் 'வார்ம்அப்' எனப்படும் முன் தயாரிப்பு பயிற்சிகள் செய்ய வேண்டியது அவசியம். இரவில் சரியான தூக்கமில்லாமல் இருந்திருக்கலாம், கனவுகளின் பாதிப்பு அல்லது இரவு உணவின் தாக்கம் போன்ற பல்வேறு காரணங்களால் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் நம்முள் பாதிப்புகள் ஏற்பட்டிருக்கலாம்.
இந்த பாதிப்புகளிலிருந்து விலகி, யோகாசனப் பயிற்சிகளைச் செய்வதற்கேற்ற வகையில் நம் உடலைத் தயார்ப்படுத்த வேண்டும். இதற்கென சில ஆசனங்கள் உள்ளன. அந்த ஆசனங்களிலிருந்து ஒன்றைத் தேர்ந்தெடுத்து நம் பயிற்சியைத் துவக்குவோம்.