
மங்கையர் மலர் இதழில், 2015 ஆம் ஆண்டு, 'உன்னதம் தரும் யோகா’ என்ற தலைப்பில் கட்டுரைகள் தொடர்ந்து வெளிவந்தன. அத்தொடரிலிருந்து சில பகுதிகள் இங்கே இத்தொடரில்...
தொடரின் அனைத்துப் பகுதிகளையும், மேலும் பல சுவாரஸ்யமான கதை, கட்டுரைகளையும் கல்கி களஞ்சியத்தில் சந்தா செலுத்திப் படிக்கலாம்.
சந்தா செலுத்த...
முதுகே முக்கியம்!
முதுகை முன்நோக்கி வளைத்து செய்யும் ஆசனங்களை பச்சிமதானா ஆசனங்கள் என்கிறோம். முதலிலேயே சொன்னபடி முதுகுத்தண்டை அடிப்படையாகக் கொண்டு ஆசனங்களைப் பிரிக்கலாம். முதுகுத்தண்டு முன்னோக்கி வளைவது பச்சிமதானா ஆசன வகை என்றும், பின்னோக்கி வளைவது பூர்வதானா ஆசன வகை என்றும் சொல்லப்படுகிறது.
வலது பக்கமாகவும், இடதுபக்கமாகவும் சுழன்று, வளைந்து (Twist) செய்யும் ஆசனங்கள் பரிவ்ரித்தி ஆசனங்கள் எனப்படும். சரியாகச் செய்யும் ஆசனங்களைவிடுத்து, அதற்கு எதிராக உல்டாவாக செய்யும் ஆசனங்களை விபரீதா என்கிறோம்.