
மங்கையர் மலர் இதழில், 2015 ஆம் ஆண்டு, 'உன்னதம் தரும் யோகா’ என்ற தலைப்பில் கட்டுரைகள் தொடர்ந்து வெளிவந்தன. அத்தொடரிலிருந்து சில பகுதிகள் இங்கே இத்தொடரில்...
தொடரின் அனைத்துப் பகுதிகளையும், மேலும் பல சுவாரஸ்யமான கதை, கட்டுரைகளையும் கல்கி களஞ்சியத்தில் சந்தா செலுத்திப் படிக்கலாம்.
சந்தா செலுத்த...
சோம்பலை நீக்கும் ஆசனம்:
நீங்கள் எதற்காக யோகாசனங்களைக் கற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள்? என்ற கேள்விக்கு பதில், ஆளாளுக்கு வித்தியாசப்படும். சிலர் உடல் இளைப்பதற்காக கற்றுக்கொள்ள விரும்பலாம். கர்ப்பிணிகள் சுகப்பிரசவம் ஆவதற்காக கற்றுக்கொள்ள முன்வரலாம். சிறுவர்கள் உடல் வலிமைக்காகவும், மன ஒருமைப்பாட்டிற்காகவும் யோகா கற்க விரும்பலாம். முதுகு வலியை விரட்டுவதற்காக சிலர் யோகா கற்றுக்கொள்ள முற்படலாம். ஆக, எல்லோரும் ஏதோ ஒருவித குறிக்கோளை மனதில் வைத்துக்கொண்டே யோகா கற்றுக்கொள்ள விரும்புகிறார்கள்.
ஒவ்வொருவரின் குறிக்கோளும் வேறுபடுவதால், எல்லோருக்கும் ஒரே மாதிரியான அணுகுமுறையில் யோகாசனங்களைக் கற்றுக் கொடுக்க முடியாது. எனவே, தனிப்பட்ட நபர்களின் தேவைக்கேற்ப, மாறுபட்ட உத்திகளைத் தேர்ந்தெடுத்து யோகாசனம் கற்றுத்தர வேண்டும்.