
மங்கையர் மலர் இதழில், 2015 ஆம் ஆண்டு, 'உன்னதம் தரும் யோகா’ என்ற தலைப்பில் கட்டுரைகள் தொடர்ந்து வெளிவந்தன. அத்தொடரிலிருந்து சில பகுதிகள் இங்கே இத்தொடரில்...
தொடரின் அனைத்துப் பகுதிகளையும், மேலும் பல சுவாரஸ்யமான கதை, கட்டுரைகளையும் கல்கி களஞ்சியத்தில் சந்தா செலுத்திப் படிக்கலாம்.
சந்தா செலுத்த...
லைஃப் ஸ்டைலை மாத்துங்க!
இப்ப எல்லோருமே கம்ப்யூட்டர் முன்னாலயே பல மணி நேரம் உட்கார்ந்து வேலை பார்க்கிறோம். இப்படி ஒரே இடத்துல உட்கார்ந்திருக்கறதால பல பிரச்னைகள் ஏற்படுது. நாம உட்கார்ற முறை சரியில்லைன்னாகூட (Posture) முதுகு வலி வர்றதுக்கு சாத்தியம் இருக்குது. கம்ப்யூட்டர்ல வேலை பார்க்கும்போது கையை மேஜை மேல சரியான உயரத்துல வெச்சுத்தான் கீ போர்ட்டை இயக்கணும். சிலர் கீ போர்டை டேபிளுக்கு அடியில வெச்சு இயக்குவாங்க. அதனால தோளுக்கு சுமை அதிகமாகி முதுகு வலி மற்றும் கழுத்துவலி வர்றதுக்கான வாய்ப்பு அதிகம்.