
மங்கையர் மலர் இதழில், 2015 ஆம் ஆண்டு, 'உன்னதம் தரும் யோகா’ என்ற தலைப்பில் கட்டுரைகள் தொடர்ந்து வெளிவந்தன. அத்தொடரிலிருந்து சில பகுதிகள் இங்கே இத்தொடரில்...
தொடரின் அனைத்துப் பகுதிகளையும், மேலும் பல சுவாரஸ்யமான கதை, கட்டுரைகளையும் கல்கி களஞ்சியத்தில் சந்தா செலுத்திப் படிக்கலாம்.
சந்தா செலுத்த...
பஸ்சிமதானாசனம்:
‘பஸ்சிம' என்றால் 'முதுகு' என்று பொருள். 'உத்தானா' என்றால் 'இழுத்தல்' அல்லது 'நீட்டுதல்' என்று பொருள். இந்த ஆசனம் செய்யும்போது முதுகுப் பகுதி நன்கு இழுக்கப்படுகிறது. எனவே இந்த ஆசனம் 'பஸ்சிமதானாசனம்' என்று கூறப்படுகிறது.
பலன்கள்:
அடிவயிற்று தசைகளை பலப்படுத்தும் குடல்கள், பித்தப்பை. இரைப்பை சிறுநீரகம் போன்றவற்றை சுறுசுறுப்பாக்குகிறது. தலைவலி, வயிற்று வலி, இடுப்பு வலிக்கு நல்ல நிவாரணம். இளமை உண்டாகும்.